ஜெயநந்தினி
New member
தனிமை
"நீலு காபி குடி மா! உனக்கு பிடிச்ச மாதிரியே போட்டுருக்கேன் பாரு" என்ற சந்திரபிரகாஷை ஒரு ஓரத்தில் இருந்து அதிர்ந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி.
கைகளில் இருந்த துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டு தன் அறைக்கு ஓடியவர் "சூர்யாயாயா உன் அப்பாக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு டா! இல்லாத உன் அம்மாகிட்ட பேசிட்டு இருக்காரு " என்ற கமலியை முறைத்தவன்
"அடிச்சிடுவேன் கமலி! அவரு உனக்கு மாமானார் அது முதல்ல நியாபகம் இருக்கட்டும்.
பைத்தியம்னு லாம் சொல்லுற!
பல்லைத் தட்டி கையில கொடுத்துடுவேன்,
ஒழுங்கா போய் உன் வேலையைப் பாரு " என்று சிடுசிடுத்தவன் கண்ணாடியைப் பார்த்து தலை சீவ ஆரம்பிக்க "ம்ம்க்க்கும் " முகத்தைத் திருப்பியவளோ "பைத்தியத்தை பைத்தியம்னு தானே சொல்ல முடியும் " என்று முணங்க
சூர்யா நறநறவென்று பற்களைக் கடிக்கும் சத்தத்தில் வெளியே ஓடிவிட்டாள்.
வேலைக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்தவன் தந்தையை நோக்கிச் செல்ல அங்கு அவரோ தன் மனைவி அவர் அருகில் இருப்பதாக நினைத்து பேசிக் கொண்டிருந்தார்.
"நீலு இன்னைக்கு நம்ம உனக்குப் பிடிச்ச கோவிலுக்குப் போகலாம்,என் கையாலேயே உனக்கு ப்ரேக் பாஸ்ட் செஞ்சு தரேன் ஓகே வா " எனக் கேட்டுக் கொண்டிருக்க
"அப்பா யாருகிட்ட பேசுறீங்க? என்னாச்சு ? ஆர் யூ ஓகே?" என்று பதட்டத்துடன் வினவிய சூர்யாவைப் பார்த்து சிரித்தவர்
"எனக்கு என்ன ஆகப் போகுது மை டியர் சன்! நான் உன் அம்மா கூட பேசிட்டு இருக்கேன்" என்றவர் இப்போது தன் வலப்புறம் திரும்பி "என்ன நீலு? ஓஓ உன் பையனை சாப்பிட்டுட்டு போக சொல்லுறியா? சரி சரி சொல்லிடுறேன் தாயே" என்றவர் அதே புன்னகையுடன் மகன் புறம் திரும்பி "சாப்பிட்டுட்டு போடா இல்லைனா எனக்கு சோறு கட்டாம் " என்று கூறிப் புன்னகைத்தார்.
அவருக்குத் தலையசைத்தவன் மனைவியிடம் சென்று "அம்மாவை அப்பா ரொம்ப காதலிச்சாங்க கமலி, அதுனால தான் அவங்க கூடவே இருக்க மாதிரி தோணுது போல!!
அதுக்காக அவரைப் பைத்தியம்னு சொல்லுற வேலைலாம் வெச்சுக்காத !" என்று எச்சரித்த பின்பே வேலைக்குக் கிளம்ப
"எல்லாருமே பைத்தியங்கள் தான் போல!" என்று புலம்பிய கமலியோ சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அதன்பின் வந்த நாட்கள் அனைத்தும் நீலுவுக்காக சமைக்கிறேன், நீலுவுடன் வாக்கிங் செல்கிறேன் , பைக் ரைட் போகப் போறேன் என சந்திரபிரரரகாஷ் செய்ததையெல்லாம் சூர்யா கண்டுகொள்ளாமல் இருந்தாலும்
பக்கத்து வீட்டுகாரர்கள் மற்றும்
தர்மபத்தினியின் கை கரியத்தால் ஒருவேளை அப்பாவுக்கு மனநிலை தான் சரியில்லாமல் போய்விட்டதோ என நினைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட
மகனின் இந்த செயலில் பாதி உடைந்த சந்திரபிரகாஷ் மனைவியுடன் தான் வாழ்ந்த வீட்டைப் பிரிந்ததால் முழுதும் மனமுடைந்துவிட்டார்.
தனிமை மட்டுமே நம் அருகில் இல்லாத நமக்குப் பிடித்தவரின் நினைவுகளை நினைத்துப் பார்த்து மகிழ கிடைக்கும் அழகிய தருணம்.
மனைவியின் அருகாமையில் தன் தனிமையைப் போக்கிய சந்திரபிரகாஷிற்கு அவர் வாழிடத்தைப் பிரிந்து வேறு ஒரு இடத்தில் வாழ முடியாமல் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையாய் கழிய இரண்டே
நாட்களில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தும் விட்டார்.
மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஓய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை மீறிய காலம்
எண்ணும் போதே ஏனிந்த
நெஞ்சம் போடுது தாளம்
எங்கே நீயோ அங்கே நானும்
வேண்டும் என்று தோன்றுதே
தன் தனிமையை மனைவியின் நிழலுடன் கடந்தவர் இப்போது மனைவியைத் தேடிச் சென்றுவிட
சூர்யா தான் குற்றவுணர்வுக்கு ஆளாகிவிட்டான்.
பழைய நினைவுகளில் உலன்றுக் கொண்டிருந்த சூர்யா , சந்திரபிரகாஷைப் பைத்தியம் என்று கூறி அனுமதித்த அதே மருத்துவமனையில் இன்று ஒரு நோயாளியாய் அவரின் மகன்களால் சேர்க்கப்பட்டுள்ளார்.
தன்னால் ராட்டினம் போல
மனம் உன்னைச் சுற்றுது நாளும்
சொன்னால் கேட்டிட மாட்டேன்
எனக் கண்ணில் கசியுது ஈரம்
உள்ளம் வெள்ளக் காடானது
உந்தன் நினைவே ஓடம்
வண்ணம் பூசிய நாட்கள்
அதை எண்ணிக் காலம் ஓடும்
ரேடியோவில் ஓடிக் கொண்டிருந்த பாடல் வரிகள் மனது முழுவதும் நிறைந்திருக்க அவர் விழிகளோ தன் மனையாளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தது.
கண்ணீரெல்லாம் வற்றி ,தோல் சுருங்கி கனத்த மனதுடன் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார் சூர்யபிரகாஷ்.
ஐம்பது வயதிற்கு மேல் தன் உற்ற துணை மட்டும் அருகில் இல்லையென்றால் வாழ்க்கையே வெறுத்து சூன்யமாகிவிடும்.
தோழியாய், காதலியாய்,மனைவியாய் இப்போது அன்னையாய் ஒவ்வொரு நொடியும் தாங்கி,அன்பு காட்டிய மனைவி மட்டும் அருகில் இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் தான் கழியும்.
"என்னைத் தனியே விட்டுட்டு போயிட்டியே கமலி ! நீ இல்லாம எனக்கு எதுவும் ஓடல, நீ என் பக்கத்துல இருக்க மாதிரியே இருக்கு ,உன்னோட வாசம் என்னை சுத்தி வர மாதிரி , என்னோட மூச்சுக் காற்று கூட உன் அருகாமைக்காக ஏங்குது !!! நீ என்னை விட்டு போயிட்டேனு நம்ப முடியாம உன் நிழலோட பேசிட்டு இருந்த என்னை பைத்தியம்னு சொல்லி இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்க!!" என்றவருக்கோ அதற்கு மேல் பேசமுடியாமல் மூச்சு வாங்க
இந்த மாதிரி சமயங்களிலெல்லாம் முதுகை தடவி தண்ணீர் கொடுக்கும் மனையாளை நினைத்தவருக்கு வற்றிய நதியாய் இருந்த கண்களிலும் நீர் சுரந்தது.
"தனியா இருக்கிறது எவ்வளவு கொடுமை தெரியுமா கமலி! என்னால முடியவே இல்லை, என்னைச் சுத்தி எப்போமே சிரிச்சுட்டு,கோபப்பட்டுட்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் சூர்யாயாயானு நீ கத்துறதுலாம் !!! முடியவே இல்லை கமலி மறுபடியும் என்னை சூர்யானு கூப்பிடுவியா?
மனசு ஏங்குது ! மற்ற நோய்களைகூட என்னால தாங்கிக்க முடியும் போல ஆனால் இந்த தனிமை நோயை மட்டும் தாங்கிக்கவே முடியல!! நிஜமாவே எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல !!" என்றவருக்கு அப்போது தான் உரைத்தது.
"கமலி உனக்கு நியாபகம் இருக்கா? என் அப்பா அம்மா இறந்தப்போ இப்படி தானே இருந்தாங்க...
நம்ம அவரைப் பைத்தியம்னு சொல்லி ஒரு மருத்துவமனைல சேர்த்துட்டோம்!! அந்த சாபம் தான்!!
இப்போ நான் அனுபவிக்கிறேன்.
அப்பா எந்தளவு வேதனை அடைஞ்சாருப்பாருல கமலி!" என்ற சூர்யா கண்களை இறுக்கி மூடிக் கொள்ள அவர் தலையை யாரோ கோதுவது போல இருந்தது.
"அப்பா!!!" ஆம் அது அவரின் ஸ்பரிசம் தான்.
" என்னை மன்னிச்சிடுங்க பா " என்ற சந்திரபிரகாஷிற்கு கண்ணீர் ஊற்றெடுக்க அதைத் துடைக்கக் கூட திராணி இல்லாமல் அப்பாவின் ஸ்பரிசத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.
"நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்ல பா! நீங்க அம்மாவை எந்தளவு காதலிச்சீங்கனு எனக்குத் தெரியும், அவங்க பிரிவை தாங்கிக்க முடியாம தானே நீங்க அவங்க நிழல் கூட உங்க தனிமையை கழிச்சுட்டு இருந்தீங்க!! ஆனால் நான் உங்களைப் பைத்தியம்னு நினைச்சு !!!" கீழே மண்டியிட்டு அமர்ந்து அழுத சூர்யாவை சந்திரபிரகாஷின் தலை கோதல் தான் கொஞ்சம் சரி செய்தது.
அப்பாவின் தலைகோதலோ அல்லது மன்னிப்பு வேண்டியதாலோ மனம் ஓரளவு மட்டுப்பட்டிருக்க தன் அறைக்குச் சென்றவர் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்திருந்தார்.
தனிமை!
இதைக் கடந்து வராதோர் யாருமிலர்
மூன்று கால்களில் நடக்கும் மழலைகள் மட்டுமே தனிமையால் அதிகம் சோர்ந்துவிடுவர்.
அவர்களின் தனிமை நாம் போக்க வேண்டுமே தவிர அதற்கு முதியோர் மற்றும் மனநல இல்லம் தீர்வாகாது!
ப்ரியமுடன்
தனு❤