கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 - இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம்-1

ksk2022-writer

Well-known member
இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா?
அத்தியாயம் -1

மனம் முழுவதும் பதற்றத்தையும் பரபரப்பையும் நிரப்பிக் கொண்டு அதை கண்களிலும்,முகத்திலும் தெரியாமல் இருக்க… தன் பார்வையை அருகில் இருப்பவர்களை சுற்றி பார்க்கத் துவங்கினாள் அவள்.

எல்லோரும் அவள் இருக்கின்ற நிலைமையில் தான் இருக்கின்றார்கள் என்று சொல்லி விட முடியாது.சில பேர் பதற்றத்தோடும்,சில பேர் அமைதியாகவும், இன்னும் சில பேர் அதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி கைப்பேசியில் மூழ்கி இருந்தனர்.

தன்னைப் போல் யாராவது இருக்கிறார்களா? என்று ஒரு நோட்டம் விட்டாள்.இல்லை அவளைப் போல் பர்தா அணிந்து யாருமே வரவில்லை.பர்தா அணிந்தவர்களோடு மட்டும் தான் பேச வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு இல்லை.

எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவள் தான்.ஆனால் சில வருடங்களாக பேசுவதையே மறந்துப் போய் இருந்ததால் சட்டென்று பேச அவளுக்கு தயக்கமாய் இருந்தது.

தன்னைப் போல் இருந்தாலவது எதாவது ஒரு வார்த்தை பேசலாமே என்ற எண்ணம் தான்.

அவள் மனதிலோ பல கேள்விகள்.'வேலை கிடைக்குமா? கிடைக்காதா? ஏற்கனவே நிறைய கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி விட்டாகி விட்டது.எல்லோரும் சொன்ன பதில் இது தான் இளங்கலை படித்தவுடன் வேலை கிடைப்பதே பெரிய விஷயம் இதில் படித்து சில வருடங்கள் கழித்து வேலை கிடைப்பது என்பது முடியாத விஷயம் என்று பலரும் சொல்லியும் அவள் தன்னால் முடிந்த முயற்சியை செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில் வேலைக்கான நேர்க்காணலில் வந்து இருக்கிறாள். இதில் படித்து சில வருடங்கள் கழித்து வேலை கிடைப்பது என்பது முடியாத விஷயம் என்று பலரும் சொல்லியும் அவள் தன்னால் முடிந்த முயற்சியை செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில் வேலைக்கான நேர்க்காணலில் வந்து இருக்கிறாள்.

அப்பொழுது தன் அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்த்தாள்.அதுவரை கைப்பேசியில் மூழ்கி இருந்தவள் அப்பொழுது தான் அவளும் தன் தலையை நிமிர்ந்து இவளைப் பார்க்க இவளும் அவளைப் பார்த்தாள்.

இவள் மெதுவாய் கையை உயர்த்தி "ஹாய்"என்று சொல்லுவதற்கு யோசிக்கும் முன் அவளே முந்திக் கொண்டாள்.

"ஹாய்"

இவளும் சற்று உற்சாகமாய் பதிலுக்கு "ஹாய்"என்றாள்.

"என் பெயர் கயல்.எனக்கு இது தான் முதல் இன்டர்வியூ உங்களுக்கு"

"எனக்கா?" என்று சற்று யோசித்தவள் "ஆறாவது இன்டர்வியூ"

"அப்படியா! அதான் முகத்தைப் பார்த்தாலே பயந்துப் போய் இருக்கீங்கன்னு தெரியுது?" என்று சொன்னாள்.

"எ..ன்ன? உண்மையாகவா சொல்றீங்க? என்னப் பார்த்தால் அப்படியா தெரியுது"என்று இவள் முகத்தை தொட்டுப் பார்த்தாள்.

"ஐயோ என்னங்க சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் உடனே பதறிப்போய் பார்க்கிறீங்க?"என்றாள் சாதாரணமாய்…

இவளோ சட்டென்று "அப்படியா!"என்றாள் வெறுமையாக…

"ஏன் ரொம்ப டயர்டா இருக்கீங்க சுறுசுறுப்பாக இருங்க அப்போத் தான் வேலைக் கொடுக்கிறவங்களுக்கும் ஆளு நல்ல சுறுசுறுப்பாய் இருக்காங்க நல்ல வேலை வாங்கலாம்னு எண்ணம் வரும்.நீங்க இப்படி சோர்வா இருந்தா எப்படி வேலை கிடைக்கும்?" என்று அவளைப் பற்றி அவளிடமே கேள்வி கேட்டாள் கயல்.

உடனே தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துக் கொள்ள தன் கையில் உள்ள கைப்பேசியை எடுத்து அதில் புகைப்படம் எடுப்பதற்கான செயலியை எடுத்து அதில் தன் முகத்தைப் பார்த்தாள் அவள்.

கயல் சொல்வதும் போல் முகம் ரொம்ப சோர்வாக இருந்தது.அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்த கயல் "நான் சொன்னது சரி தானே"

"ஆமாங்க நீங்க சொல்றதும் சரி தான் இப்போ என்னச் செய்ய?" என்றாள் பதற்றத்தோடு....

அவளின் பதற்றத்தைப் புரிந்துக் கொண்ட கயல் "ஏன் பதற்றப்படுறீங்க? பிரச்சினையே இல்லை தண்ணீர் பாட்டில் வைச்சு இருக்கீங்களா?"

"ஆமாம் வைச்சு இருக்கேன்" என்றாள்.

"தண்ணீர் பாட்டிலை எடுத்து உங்க தாகம் தீர வரைக்கும் தண்ணீர் நல்லா குடிங்க"என்று தன் கைப்பையில் இருந்து ஒரு சின்ன பொருளை எடுத்துக் கொடுத்தாள்.

இவள் புரியாமல் கயலைப் பார்க்க... "தண்ணீர் குடிச்சுட்டு இந்த வெட் டிஸ்யூ வால முகத்தை துடைச்சு கண்ணை மூடி மூச்சை நல்லா இழுத்து விடுங்க.அப்புறம் இந்த சோர்வு,பயம் எல்லாம் போய்டும்" என்று அதைக் கொடுத்தாள் கயல்.

"யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?"இவள் தயக்கமாய் கேட்க…

"யார் சொல்ல என்ன இருக்கு? தண்ணீர் தானே குடிக்கிறீங்க இதுல என்ன தப்பு இருக்கு.குடிங்க" என்று பதிலளித்தாள் கயல்.

இவளும் சரியென்று கயல் சொன்ன மாதிரி தண்ணீரைக் குடித்தாள்.ஒரு பாட்டில் தண்ணீர் முழுவதையும் குடித்து விட்டாள்.அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.'இவ்வளவு தாகத்திலா இருந்திருக்கிறோம்' என்ற யோசனையில் அடுத்து மற்ற எல்லாவத்தையும் செய்து முடிக்கும் போது அவளுக்கே அது ஒரு பெரிய மாற்றத்தை தந்ததற்கான உணர்வை தந்தது.

"இப்போ பாருங்க" என்று தன் கைப்பேசியில் உள்ள கேமராவின் முகப்பைக் காட்ட… அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

இப்பொழுது அவள் முகத்தைப் பார்க்கும் பொழுது பளிச்சென்று உற்சாகமாய் இருந்தது.

"எப்படிங்க இது நடந்திச்சு?"இவள் ஆச்சரியமாய் கேட்டாள்.

"ரொம்ப ஈஸி நீங்க கொண்டு வந்த தண்ணீர் தான் அதை செய்தது எப்பொழுது எல்லாம் நாம சோர்வா, ரொம்ப மூச்சு முட்டுற மாதிரி நினைக்கிறோமோ? அப்போ எல்லாம் தண்ணீர் குடித்தால் அதில் இருக்கிற புத்துணர்ச்சி நம்ம உடம்புலயும் வந்திடும். தண்ணீர் இல்லாம ரொம்ப வறண்டு போறதுனாலத் தான் முகமும் சட்டுன்னு வறண்டு போய்டுது நா கொடுத்த வெட் டிஸ்யூ முகத்துல ஈரம் பட்டதும் இன்னும் ப்ரெஷ் ஆயிடுச்சு அவ்வளவுதான்"என்றாள் சிரித்துக் கொண்டே…

"ரொம்ப தாங்ஸ் கயல்" என்றாள் சந்தோஷத்தோடு…

"அதெல்லாம் ஓகே இவ்வளவு பேசிட்டோம் உங்க பேர் சொல்லலை"

"ஓ… சாரி கயல் சாரி… நான் ஆஸ்மின்" என்றாள் அழகாய் சிரித்துக் கொண்டே…

"அழகாய் சிரிக்கிறீங்க ஆஸ்மின். இவ்வளவு நேரமா இது தான் மிஸ்ஸிங், இதே சிரிப்போடு உள்ளே போய் வேலையை கன்பார்ம் பண்ணிட்டு வர்றீங்க ஓகே"என்று பெருவிரலை உயர்த்திக் காட்டினாள் கயல்.

ஆஸ்மினுக்கு ஆச்சரியமாய் இருந்தது.'இவ்வளவு இனிமையாகக் கூட பேச முடியுமா? ஒரு வார்த்தையில் கூட அவள் வலியை உணரவில்லையே! மற்றவர்களின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தை என்றாலே அது வலியைத் தான் தரும் என்று நினைத்திருந்தவளுக்கு இந்த சந்திப்பு புது மாற்றத்தை அவளுள் விதைக்கத் தான் செய்தது.

"ரொம்ப அழகா பேசுறீங்க கயல். மறுபடியும் தாங்ஸ்"

"எதுக்கு ஆஸ்மின்?"

"ஒரு அழகான சந்திப்பு நமக்குள்ள நடந்திச்சுல்ல அதுக்குத் தான்"

"அப்படியா! தாங்ஸ்"

"எனக்கு எதுக்கு தாங்ஸ் சொல்லுறீங்க? கயல்"

"நீங்களும் அமைதியா பேசுறீங்கல்ல அதனால அது ஒரு அழகான சந்திப்பா அமைந்தது அதற்குத் தான்"என்றாள்.

அப்பொழுது ஒரு குரல் "மிஸ் ஆஸ்மின் நீங்க தான் அடுத்த கேண்டிட்"என்றாள் அந்த வரவேற்பறையில் இருந்த பெண்.

அந்த பெண்ணின் அழைப்பான "மிஸ் ஆஸ்மின்" என்ற பெயரில் அவள் சட்டென்று தான் இருக்கும் இடத்தையே மறந்து நின்றாள்.

அவள் மனதிலோ அன்று நடந்த நிகழ்வு முழுவதும் அவள் மனதிலே ரணமாய் அழுத்தியது.

"ஆஸ்மின் நீ எடுக்கிற முடிவு எவ்வளவு பெரிய முடிவுன்னு உனக்கு இப்போத் தெரியாதுமா அதுக்கு பிறகு எதை எல்லாம் சமாளிக்கனும்னு உனக்கே தெரியாது நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சுப் பாரு ஆஸ்மின் சட்டுன்னு முடிவு எடுக்காதே!"

கண்கள் இரண்டும் அழுது சிவந்துபடி..."இல்லைம்மா இந்த முடிவு நான் இப்போ எடுக்கலை நான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே யோசிச்சு யோசிச்சு இதோ இப்போத் தான் இந்த முடிவை எடுக்கிற நிலைமைக்கே வந்து இருக்கேன்.என்னால முடியலை ம்மா என்னால முடியவே இல்லை ம்மா இதுக்கு மேல நான் இருந்தேனா" என்று அவள் அன்று நடந்ததை நினைக்கும் போது யாரோ அவளைத் தொட்டு அழைப்பது போல் இருப்பதை உணர்ந்து நிகழ்வில் இருக்கும் நிலைமைக்கு வந்து யாரென்றுப் பார்க்க… அவளை அழைத்த கயல் "ஆஸ்மின் உள்ளே போங்க "என்று அருகில் இருந்த அறைக்கதவை நோக்கி கைக்காட்டினாள்.

இவள் திரும்பி நடக்கும் போது அதே கயலின் குரல் மறுபடியும் அழைத்தது."ஆல் த பெஸ்ட் ஆஸ்மின்" என்றாள்.

திரும்பிப் பார்த்து "தாங்ஸ்"என்று மெதுவாக உதட்டை அசைத்து சொன்னாள்.கயல் தன் விரலை அவளின் உதட்டிற்கு அருகே கொண்டு சென்று "சிரிப்போடு செல்" என்பது போல் சைகைச் செய்தாள்.

அவளின் சைகையைப் பார்த்து ஆஸ்மின் முகத்தில் புன்னகை ததும்ப நேர்க்காணல் அறையை நோக்கிச் சென்றாள்.

இதுவரை சென்ற நேர்க்காணலுக்கு படபடப்பும் பயத்தோடும் சென்றவள் முதன்முதலாக இந்த நேர்காணலுக்கு கயலின் உதவியால் சிரித்துக் கொண்டேச் சென்றாள்.

அவள் புன்னகையோடு நுழைவதைக் கண்ட நேர்காணலை நடத்துபவர்களும் அவளுடன் சேர்ந்து புன்னகைத்தனர்.அதில் ஒருவர் அவளிடம்...

"உங்க பேரு"

"மிஸ் ஆஸ்மின்" என்றாள் இருந்த தயக்கத்தையும் வெளியே தூக்கி எறிந்து விட்டாள்.

அடுத்து அவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் புன்னகை முகம் மாறாமல் தனக்கு தெரிந்த பதில்களைச் சொல்லி விட்டு வெளியே வந்தாள் ஆஸ்மின்.

ஆஸ்மினுக்கு அடுத்து கயல் தான் வாசலில் காத்துக் கொண்டிருந்தாள்.இவள் வெளியே வந்து அவளருகில் மெதுவாய் "ஆல் த பெஸ்ட்" என்றாள்.

கயலும் மெதுவாக "தாங்க்யூ"என்று சொல்லி விட்டு அவள் அறையினுள் நுழைந்தாள் அதே புன்சிரிப்போடு…

ஆஸ்மின் வெளியே காத்துக் கொண்டிருந்தாள்.கயலுக்கு அடுத்து இன்னும் இரண்டு பேர் நேர்காணலுக்கு செல்ல வேண்டி இருந்தது.

கயல் ஆஸ்மினுக்கு அருகில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்."கயல் எப்படி வேலை நிச்சயமா கிடைச்சிடுமா?"

"வேலை கிடைக்குது கிடைக்கலை அது பிரச்சினை இல்லை என்னால முடிஞ்ச பெஸ்ட்டை கொடுக்கிறேன் அவ்வளவு தான் அதுக்குப் பிறகு வேலை தரவங்களோட விருப்பம்.இது இல்லைன்னா இன்னொரு வேலையைத் தேடி போக வேண்டியது தான்"

கயலின் பதில் அவளுக்கு ஒரு புது உற்சாகத்தை தந்தது.

"கயல் இப்போத் தான் முதல் இன்டர்வியூன்னு சொன்னீங்க எப்படி உங்களால இவ்வளவு பாஸிட்டிவ்வா யோசிக்க முடியுது?"

அவள் சிரித்துக் கொண்டே "எனக்கு முதல் இன்டர்வியூன்னு பொய் சொன்னேன் ஆஸ்மின். இது நான் எட்டாவதாக வந்து இருக்கிற கம்பெனி நான் சொன்னதை நம்பி தானே நீங்களும் அவ்வளவு கான்பிடன்டா இன்டர்வியூவை அட்டன் பண்ணப் போனீங்கல்ல அதான் நல்லதுக்காக சின்னதாக ஒரு பொய்" என்று சொல்லிச் சிரித்தாள்.

ஆஸ்மினால் அவள் சொன்னதை நம்பவே முடியவில்லை.தன்னை நியாயப்படுத்த பொய் சொல்லுபவர்களுக்கு மத்தியில் மற்றவர்களின் நலனுக்காக பொய் சொன்னேன் என்று சொல்லும் கயல் அவளுக்கு புதிதாய் தெரிந்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டு பதிலுக்கு புன்னகை ஒன்றை சிந்தினாள் ஆஸ்மின்.

வந்திருந்த நபர்களில் நேர்காணலில் முதல் கட்டத் தேர்வில் ஐந்து பேர் தேர்வாயினர்.அதில் ஆஸ்மினும் கயலும் தேர்வாகி இருந்தனர்.

இருவருக்கும் ஒரே மாதிரி தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாய் இருந்தது.மறுநாள் திரும்பவும் வந்து ஒரு சின்ன நேர்காணலில் கலந்துக் கொண்டால் அதில் இறுதியாக யாரை வேண்டுமோ அவர்களை நிறுவனம் தேர்ந்தெடுக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.ஆனால் எத்தனை ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று நிறுவனம் அவர்களிடம் தெரிவிக்கவில்லை.

இருவரும் விடை பெறும் நேரம் வந்தது.கயல் ஆஸ்மினிடம் "ஓகே ஆஸ்மின் நாளைக்கு சந்திக்கலாம் ரெண்டு பேரும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடத் தான் நாளைக்கு வீட்டுப் போறோம்"என்றாள்.

"நிச்சயமா கயல் நீ சொன்ன மாதிரியே நடக்கனும் தான் நான் ஆசைப்படுறேன்.ஏன்னா எனக்கு கிடைச்சிருக்க ஒரு நல்ல ப்ரெண்டோட வேலை செய்றதில் எனக்கு இஷ்டம் தான்,உன் போன் நம்பர் தருவியா? நம்ம நட்பை இன்னும் தொடரலாமா?" என்று யோசனையோடு கேட்டாள் ஆஸ்மின்.

அவள் இந்த மாதிரி யாரிடமும் கைப்பேசி எண் கேட்டதெல்லாம் இல்லை.முதல் தடவையாக கேட்பது அவளுக்கு சிறு தயக்கமாக இருந்தது.

கயல் "அப்படியா! உங்க நம்பரை சொல்லுங்க நான் ஒரு மெஸேஜ் அனுப்புறேன்" என்றாள்.

இருவரின் எண்ணும் பரிமாற்றப்பட்டது.அங்கே இருவருக்குமாய் அழகாய் புது ஒரு நட்புறவு ஆரம்பம் ஆனது.

இருவரும் விடைபெற்று தங்கள் இருப்பிடங்களை நோக்கிச் சென்றனர்.

ரொம்ப நாளைக்குப் பிறகு அவள் மனம் விட்டு பேசியது போல் ஆறுதலாய் இருந்தது.அதோடு இந்த இன்டர்வியூவில் அடுத்து வரச் சொல்லி இருப்பதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எண்ணம் ஆஸ்மின் மனதில் கொஞ்சமாய் உள்ளே வரத் தொடங்கியது.

(தொடரும்)
 
Shailaputri R

Well-known member
ஆஸ்மின் வாழ்கைல நிறைய அடி வாங்கியிருப்பா போல.. கயல் ரொம்ப அழகா பேசுறா.. மனசுக்கு இதமா பேசுறவங்க கிடைக்கிறது அபூர்வம்.. கயல் அந்த type.. இவங்க சந்திப்பும் இதமான சந்திப்பா இருக்கு..

வாழ்த்துக்கள் 💐
 
மனமார்ந்த நன்றிகள் சிஸ்😍😍.முதல் கமெண்ட் கொடுத்து இருக்கிறீங்க ரொம்ப ஹாப்பி சிஸ் 😇😇 💗 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
 
Indu Shyam

Moderator
Staff member

அருமையான ஆரம்பம். வாழ்த்துக்கள்🎉🎊
 
Jenitha d krish

Well-known member
அருமையான எபி.. செம.. ஆஸ்மின் தான் ஹீரோயினா?? கொஞ்சம் பயந்த இன்னொசென்ட் டைப்பா தெரியுறா.. கயல் நல்ல பொண்ணா இருக்குறாலே.. ரெண்டு பேருக்கும் வேலையே குடுத்துடுங்க
 
Top