கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

உன்னுள் உறைந்தேனே பிரியசகி

அர்பிதா

Moderator
Staff member
உன்னுள் உறைந்தேனே பிரியசகி 7

இருந்து இருந்து உமா காத்திருந்த அந்த பௌர்ணமி தினமும் வந்தே விட்டது. ஆனாலும் இன்று வரை சத்யன் கூறிய படி, அவளின் காட்சிகளும் நிற்கவில்லை, அந்த காட்சிகள் கூற வரும் அர்த்தத்தையும் அவளால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை.

சத்யனிடம் இதை பற்றி கேட்டால், பௌர்ணமி வரை அமைதி காக்கவே சொல்கிறானே தவிர, அவன் பதிலில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை.

இதற்கிடையில் உமா, முகுந்தன் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் அடிக்கடி எழ துவங்கி இருந்தது.

அதுவும் உமா, சத்யனை ஒரு சேர காண , காண திருமண பேச்சுக்கள் வீரியம் அடையவே செய்கிறது.

ஆனால் உமா தான், எனக்கு எதுவும் நியாபகம் வர வில்லை, கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று காலத்தை கடத்தி கொண்டு வருகிறாள்.

நாயகி கூட உமாவை ஆதரித்தே பேச, முகுந்தனும், அவனின் தந்தை வேதவாளும் கூட எதுவும் செய்ய முடியவில்லை.

வேதாவை காணும் போது எல்லாம் தன் காட்சியில் கண்ட அந்த கோர முகமே அவளுக்கு கண் முன் வர, அவரிடம் அதிகம் பேசி கொள்வதும் கூட இல்லை உமா.

இதுவே வேதாவை எதோ உறுத்த, திருமணம் வரை அமைதி காப்போம் என்று அவர் இருக்க, இதுவே பின்னாளில் வேதாவில் இருந்து ஒலிவேந்தனை வெளியே கொண்டு வர போகிறது என்பதை அறியாமல் இருந்து விட்ட மடந்தை அவள்.

கடந்த ஒரு வாரமாகவே இதே குழப்பங்கள் அவளுள் ஓடி கொண்டு இருக்க,

இன்று பௌர்ணமி தினத்தன்று, அனைத்து குழப்பமும் தீர, மன நிம்மதி வேண்டும் என்று எண்ணியவளை, தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரும் படி நாயகி தான் கூறி அனுப்பி வைத்தார்.

அதன் படி கொல்லிமலையில் இருக்கும் "அறப்பளீஸ்வரர் திருக்கோவில்" சென்று அங்கு இருக்கும் அறப்பளீஸ்வரரான சிவனை வழிபட்டவள் மனதில் எதோ தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.

அங்கு இருந்த பாறை ஒன்றில், கூரிய வெட்டு அடையாளம் இருக்க, அது உமாவின் கண்ணையும் மனதையும் உறுத்தவே செய்தது. சத்யனிடம் கேட்டு கொள்ளலாம் என்று எண்ணியவன் அதை தன் கைபேசியில் அதை படம் பிடித்து கொள்ள தவறவில்லை.

திரும்பும் வேளையில் வந்த பாதையில் மழையில் காரணமாக மரம் ஒன்று விழுந்து இருக்க, வேறு பாதையில் வண்டியை திருப்பினாள் உமா.

வழி தோறும் இருக்கும் மரங்களும், செடிகளும் அவளிடம் கதை பேச அழைப்பது போலவும், திடீரென மரங்களுக்கு கண்ணும், வாயும் தோன்றி மறைவது ஒன்றும் தோன்ற துவங்கியது.

இதுவும் கூட தன் மன பிரம்மை என்று எண்ணியவள், எண்ணத்தை தடை செய்யும் படி, வண்டியும் கூட நின்றே விட்டது.

இறங்கி 'என்ன' என்று பார்த்தவளுக்கு, அப்போது தான் புரிந்தது வண்டி பழுதாகி விட்டது என்று.

'என்ன செய்வது' என்பது புரியாமல், உதவியும் கூட கேட்க முடியாத அந்த அடர்ந்த காட்டில் மாட்டி கொண்டவளுக்கு உள்ளூர பயமும், படபடப்பும் அதிகரிக்கவே செய்தது.

கைபேசியில் உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று எண்ணியவள், யாருக்கு முயற்சித்தாலும் அழைப்பு துண்டித்து போக, சத்யனுக்கு மட்டுமே அழைப்பு இணைக்கபட்டது.

"சொல்லு உமா, எங்க இருக்க? காலைல இருந்து ஆளே காணோம்" என்றான் சாதரணமாக.

"சத்யா, நான் இங்க கோவில் ஒன்னுக்கு வந்தேன்...." என்றவள் அனைத்தையும் பதட்டமாக கூற.

"நீ எதுக்குடி கொல்லிமலைக்கு போன...யார கேட்டு போன" என்றான் அவன் பதப்பட்டபடி, மேலும் தொடர்ந்தவன்.,

"சரி நீ அங்கேயே இரு... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் நான் அங்க வரேன்" என்றவன் உடனே அழைப்பை துண்டித்தும் விட்டான்.

அந்த அடர்ந்த காட்டினால் நடுவில்நின்று கொண்டு, "என்ன செய்வது" என்பது புரியாமல் அவள் இருக்க.,

தூரத்தில் இருந்து ஒரு கழுகு அவளை வட்டம் இட்ட படி இருந்தது, அவளின் கவனத்தை ஈர்த்தது அந்த பச்சை நிறத்தில் இருந்த கழுகு, இமைக்கும் நொடியில் அசுர வேகத்தில் அது அவளை நெருங்க,

பயந்து போய் கைகளால் முகத்தை மூடி கொண்டு நின்று விட்டாள் உமா.

அவளை நெருங்கிய கழுகு, அவளின் முன் அமர்ந்து, தன் மூக்கால் அவளின் பாதத்தை பணிவது போல் லேசாக வருடி விட்டு,

"வாருங்கள் தேவதையே!! உங்கள் இடம் வர இத்துணை தாமதமோ" என்றது அதன் கரகர குரலில்.

கழுகு ஒன்று தன்னை தாக்காமல் இருப்பதே வியப்பு என்றால், அது பேசவும் வேறு செய்வது உமாவை மிரளவே வைத்தது.

அதிலும் சத்யன் அழைப்பது போல, 'தேவதை' என்று அது அழைக்க, சற்று அதிர்ந்து தான் போனால் உமா.

அவளின் மிரட்சியை கண்ட கழுகு,

"பயப்பட வேண்டாம் தேவியே, நாங்கள் அனைவரும் உங்கள் காவலாளிகள்", என்ற கழுகு வானை நோக்கி தன் கீச் குரலால் ஒளி ஒன்றை எழுப்ப.,

சில பருந்துகளும், கிளிகளும், கழுகுகளும் அவள் முன் வந்து நின்றன.. வந்த அத்தனையும் அவள் பாதம் பணிந்து அவளை வணங்க.,

இது அனைத்துமே அவளுக்கு புதிதாக இருந்தாலும், பேசும் பறவையை வாழ்வில் முதன் முறை பார்ப்பவளுக்கு தான் கனவில் இருக்கிறோமோ என்றே தோன்றியது.

தன் தலைக்கு மேல் அனைத்தும் வட்டம் இட, அதிலும் அனைத்தும் ஒரு சேர்ந்து ஒலி ஒன்றை எழுப்ப, அது எப்போதும் அவர்களிடம் இருந்து வரும் ஒலியை போல் இல்லாமல்,

எதோ வரவேற்பு பறை போல் அனைத்தும் ஆனந்தமாய் அவளின் தலையை சுற்றி வட்டம் இட்ட படி ஆடிக்கொண்டு இருக்க.,

முதலில் இருந்த பயம் அவளுக்கு சற்று குறைந்தே இருந்தது, அவைகளின் மகிழ்ச்சி உமாவையும் தொற்றி கொள்ள, சிரித்த படி நின்று இருந்தாள் அவள்.

அந்த பச்சை கழுகு மட்டும், தன் ஆட்டத்தை நிறுத்தி கொண்டு, அவள் முன் வந்து காற்றில் நின்று,

"நாம் இடம் செல்வோம் வாருங்கள் ராணியே" என்றது படு பவ்யமாக தன் சிறகுகளை தாழ்த்திய படி.,

"அதற்கு என்ன கூறுவது" என்று விழித்து கொண்டு நின்றவளை நெருங்கிய கருப்பு கிளி ஒன்று.,

"வா உமா... நாம் இடம் தான்.. ஆபத்து இல்லை" என்றது இனிமையான அதன் குரலில்.

சத்யனிடம் பேசியதையும், அவன் வருவதையும் கூறியவளை பார்த்த அந்த பறவைகள் அனைத்தும்.,

"காட்டின் தொலைந்த வாரிசுகள் திரும்புகிறார்கள்" என்று மத்தளம் கொட்டி அறிவிக்க,

"சத்யன் வருவான் உமா... நீ உள்ளேவா.. அவனுக்கா இந்த காட்டில் வழியா தெரியாது!!!" என்றது அந்த பச்சை கழுகு.

ஏனோ இவைகளை சந்தேகிக்க தோன்றவில்லை உமாவிற்கு 'சரி' என்ற படி அவைகளுடன் காட்டில் தன் முதல் அடியை எடுத்து வைத்தவளுக்கு தோன்றியது அதே காட்சியான பிம்பங்கள்.

வெண்பட்டு முழுவதும் கருப்பு சாயம் பூச பட்டபடி, சில இடங்கள் கிழிந்து, களைத்தும் கிடக்க, மூச்சு திணறினாலும் யாரிடமோ இருந்து பயந்து ஓடி கொண்டு இருந்தனர் உமையாலும், சத்யசீலனும்.

தன் கையை இறுகி பற்றி இருந்தவன் மேல் தன் பார்வையை ஓட விட்டவள்,

கைமுழுதும் கீறல்களும், ரத்த கசிவுகளை நிறைந்து இருக்க, முகத்தில் கூட ஒரு சில கீறல்கள் இருக்க, அதை எதையும் பொருட்படுத்தாதவன் உமையாளின் கரத்தை பிடித்த படி அந்த அடர்ந்த இருண்ட காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தான் சத்தியசீலன்.

அவர்களை துரத்தும் குதிரை படை சத்தம் மிக அருகில் கேட்க, இதய துடிப்பும் கூட வெளியில் கேட்கும் அளவிற்கு படபடப்பு இருந்தது இருவருக்குள்ளும்.

ஓடியவர்களின் ஓட்டம் அந்த மலையின் இறுதிக்கு சென்று நிற்க, அங்கிருந்து நீர் ஊற்று எடுத்து அருவியாய் பொங்கி ஓடி கொண்டு இருக்க,

பின்னால் தங்களை கொள்ளவே துரத்தும் படையும், முன்னால் நீர் பெருகும் அருவியுமாய்.

மனதில் காதல் பொங்க, உயிர் காக்க தன்னுடன் வந்த தன் மனையாளையும் கண்ட சத்தியசீலன்.

"உமையாள், என் மீது நம்பிக்கை கொள். வாழ்விலும் சாவிலும் துணை நிற்போம்" என்றவனின் பேச்சு புரியும் முன்பே உமையலுடன் அந்த அருவியில் குதித்தான் சத்தியசீலன்.

அருவியில் குதித்த அடுத்த சில கணங்களில், எங்கோ மிதப்பது போன்று உமையலுக்கு தோன்ற, சத்யசீலனின் கையை இருக பற்றியவள் மயங்கி விட,

அதில் பதை பதைத்த சத்தியசீலன் அவளை தன் கைகளால் ஏந்தியபடி, ஏதோமுடிவற்ற பாதையில் பயணம் ஆனான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தவள், சிரம பட்டு கண்களை திறக்க,

இரு மரத்திற்கும் இடையில் ஆலம் விழுதுகளை கொண்டு தொங்கும் ஊஞ்சல் படுக்கையில் அவள் படுத்து இருக்க,

அந்த அடர்ந்த காட்டினால் குளுமை கூட அவளுக்கு போதாமல் போய் விடுமோ என்று இனியவன், அவள் மேனி வருந்தி வியர்வை சிந்தும் முன் அவளின் தலைக்கு மேல் தென்னங்கீற்றை தொங்க விட்டு, அதை காற்றில் மேலும் அசைக்க இரண்டு குரங்குகளை நியமித்து இருந்தான் சத்தியசீலன்.

கண்விழித்தவள் எழுந்து அந்த ஊஞ்சலில் அமர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, இவள் கண் விழித்ததை அறிவிக்க,

மத்தளத்தை தன் இரு கால்களாலும் கொட்டிய படி இரண்டு வெள்ளை கரடிகள் அமர்ந்து இருந்தன.

அதன் ஒலி கேட்டு சத்தியசீலன் எங்கு இருந்தோ வர,

"குடிக்க தண்ணீர் வேண்டுமா ராணியே" என்றான் கண்ணில் குறும்பு மின்ன.

வெட்க புன்னகையில் 'வேண்டாம்' என்றவளின் கண்ணில் இருக்கும் மிரட்சியை பார்த்தவன் என்ன என்று வினவ.

"இவை அனைத்தும்... அதிசயமாக உள்ளது" என்றாள் வியந்த படி.

"இவை மற்றவர்களுக்கு தான் விலங்குகள்.. எனக்கு உடன் பிறவா சகோதரர்கள்.. இவர்கள் உடன் தானே நான் வளர்ந்தேன்" என்றான் பெருமையாக.

அதற்குள் பருந்து நான்கு, உணவு பரிமாற பட்ட இலைகளை ஒரு துணியில் வைத்து, அதில் தன் வாயால் கவ்விய படி பறந்து வர, அதையே ஆச்சரியமாக பார்த்தவளை மேலும் திகைக்க வைக்கும் வண்ணம்,

"தங்கள் உணவு இதோ ராணியாரே" என்றன அவை.

பேசும் பருந்துகளை பற்றி கேள்வியும் படாமல் இருக்க, இங்கு அவைகளை பார்த்தவள் மிரள.

தங்க நிறத்தில் பாம்பொன்று மலர்களால் தொடுக்க பட்ட மாலையுடன், உமையாளை நெருங்கி அவள் பாதத்தில் அதை வைத்து விட்டு, சத்தியசீலன் மேல் ஊர்ந்த படி ஏறி அவளின் தலையில் உச்சியில் இருக்கும் கிரீடத்தில் வைரம் போல் மின்னும் ஒரு வெள்ளை கல்லை கக்கி,

"எங்கு சென்றாலும் எங்கள் நினைவுகள் உன்னை பிரியாது" என்றுரைத்து கீழே இறங்கியும் கொண்டது.

பேசும் பம்பை விட, கழுகும் பாம்பும் சண்டையிடாமல் இருப்பது இங்கு மட்டும் தான் போல என்று எண்ணியவள் சத்யசீலனை பார்க்க, அவனோ,

"இங்கு இருக்கும் அனைத்து விலங்குகளுமே பேசும், சிரிக்கும், சிந்திக்கும்.. இந்த மலையின் அதிசயமும் இது தான்".

அதிலும் மயில் ஒன்று, உமையாலுக்கு ஆடைகளை கொண்டு வந்து இருக்க, குரங்கு இன்று அவளுக்கு தேவை படும் மற்ற ஆபரணங்களையும், உடையையும் கொண்டு வந்தது.

"அங்கு இருக்கும் அருவியில் நீராடி விட்டு வா உமையாள்" என்றவனின் பேச்சிற்கு ஏற்ப அவள் எழுந்து செல்ல, அவளை தொடர்ந்த படி நான்கு நரிகள் கையில் வால் ஒன்றுடன் பின் தொடர

"காவலோ" என்றவள் உளம் மகிழ்ந்து சிரித்து, அருவியை அடைய.

அங்கு யானை குட்டி ஒன்று தன் காதுகளை சிறகாக பயன் படுத்தி, அருவியில் பறந்து கொண்டே குளித்து முடித்து, மேலும் அந்த காட்டை பறந்து வருவதை பார்த்தவள்,

"பறக்கும் யானையோ!!, இதுவும் இந்த அதிசய காட்டின் சொத்து போல" என்று எண்ணியவள் குளிக்க அருவியில் கால் வைக்க,

அவள் தோள் தொட்டு, காட்சியில் இருந்து வெளியே கொண்டு வந்தான் சத்யன்... அவனை கண்டதும் தான் இவை அனைத்தும் தான் ஏற்கனவே வாழ்ந்த வாழ்க்கை பிம்பம் என்பது புரிந்தது உமாவிற்கு.

"உனக்கு ஒன்னும் இல்லை தானேடி?" என்றான் பதட்டமாக.

அவள் பதில் ஏதும் கூறும் முன்,

"நாங்கள் இருக்கும் போது எங்கள் ராணிக்கு என்ன நேரும்" என்றது பச்சை கழுகு பெருமையாய்.

அதோடு அந்த கருப்பு கிளி ஒன்று அவனின் தோள் மேல் அமர்ந்து கொண்டு,

"இப்போது தான் இங்கு வர நேரம் கிடைத்ததா சத்யா" என்றது சற்று முக வாட்டத்துடனே.

அதற்குள் பாம்பும், நரியும் என்று அவர்களின் காட்டு குடும்பம் ஒன்று சேர்ந்திட,

இவைகளை பார்த்து முதல் முறை தோன்றிய பிரமிப்பு குறையாமல், இன்றும் இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் உமா.

நேரமும் மலையை கடந்து இரவை நெருங்கி கொண்டு இருக்க, கிளம்பலாம் என்று சத்யன் முடிவெடுத்து,

"உமா நீ போய் கார்ல உக்காரு... நான் இதோ வந்துடுறேன்" என்றவன் தன் விலங்கு படை சூழல் இருப்பதை கண்டு, லேசாய் சிரித்தவள், 'சரி' என்ற படி காரை நோக்கி நடக்கவும் செய்தாள்.

கிட்ட தட்ட காரை நெருங்கி, அதன் கதவை திறக்க முற்பட்ட நேரம்,

அவள் முன் கிட்டத்தட்ட பன்னிரெண்டு அடி உயரம் உள்ள நாகம் ஒன்று படம் எடுக்க, அதன் ஆக்ரோஷம் அதன் கண்ணிலேயே தெரிய,

அதன் உயரமும், அதன் கோவமும் உமாவை நடுங்கவே வைக்க, பயத்தில் காரை பிடித்த படி அவள் நின்று கொள்ள,

கோவ கனலில் இருந்த அது உமாவை அதே வீரியத்தில் அதை தாக்க முயன்று, தன் வாயை திறந்து, தன் விஷத்தை கக்க நாவை வெளியே எடுத்த நேரம்,

"நிலவேந்தா, உமா இன்னும் எதையும் அறியாதவள். நிறுத்து உன் தாக்குதலை" என்றான் சத்யன் அதே ஆக்ரோஷம் மாறாமல்.

அதற்குள் அவனின் அதிசய விலங்கு படை உமாவை சூழ்ந்து நின்று கொள்ள,

சத்யனும், உமாவை தன் பின்னால் பாதுகாத்து விட்டு, மேலும் தொடர்ந்தான்

"உண்மை நிலவேந்தா, உமா இன்னும் பல விஷயத்தை அறியவில்லை. அறிவதற்குள் அவளுக்கு விபத்தும் ஏற்பட்டு விட, என்னால் எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது. என்னை மன்னித்து விடு" என்றான் வருத்தம் தேய்ந்த குரலில்.

அவன் பேச்சின் உண்மை உணர்த்த அந்த சிவப்பு நாகமும், உமாவையும், சத்யனையும் மாறி மாறி பார்த்து விட்டு,

கோவம் கொண்ட கண்ணில் நீர் கோர்த்து கொள்ள, முகமும் கூட வாடி சோகத்தை வெளிக்காட்ட,

உமையாளை நெருங்கி, தன் வாலால் அவளை அணைத்த படி இரண்டு துளி கண்ணீர் சிந்தி விட்டு, மறுபடியும் அந்த அடர்ந்த காட்டிற்குள் மறைந்து கொண்டது.

பின் உமாவை கூட்டிக்கொண்டு கிளம்பினான் சத்யன். நடந்த அனைத்தையும் அசை போட்ட படியே வந்தாள் உமா.. அவளுக்கு தோன்றும் கட்சியும், இங்கு அவள் கண்ட காட்சிகளையும் சேர்த்து வைத்து யோசித்தவளுக்கு,

சில விஷயம் புரிந்தாலும், பல மர்மமாகவே இருந்தது

பேசும் விலங்குகள் இருக்கும் அந்த காட்டில், அந்த சிவப்பு நாகம் மட்டும் ஏன் பேசவே இல்லை... அழுகை கூட வந்து அழுததே தவிர, ஏன் பேச வில்லை? என்று ஒரு மனம் யோசிக்க,

இந்த யுகத்திலும் பேசும் விலங்குகளா... அதுவும் அவள் கண்ட கருப்பு கிளி, சிவப்பு கழுகு என்று இயற்கைக்கு மாறாக இருக்கும் அவைகளின் வண்ணமும் அவளை மேலும் யோசனையில் ஆழ்த்தவே செய்தது.

இவை அனைத்திற்கும் பதில் சத்யனிடமே இருக்கும் என்று அவள் அவனை பார்க்க,

அந்த கல்லுளிமங்கனோ, சாலையில் கண்ணாய் காரை செலுத்தி கொண்டு இருந்தான்.

வீட்டை அடைந்தும் கூட வாய் திறக்காமல் இருக்கும் அவனை கண்டவள், நேரே அவளின் அறைக்கு செல்ல,

இப்போது தான் தன் அறையில் இருக்கும் அந்த விலங்குளின் பொம்மையும், பறக்கும் யானையும் என்று அனைத்தையும் தன் அறையில் வைத்து இருப்பதின் காரணத்தை புரிந்து கொண்டாள் அவள்.. புரிந்தவளுக்கு லேசான புன்னகை எட்டி பார்க்க,

அப்போது விசில் அடித்து கொண்டு ஒரு கையில் கார் சாவியை ஆட்டிய படி வரும் சத்யன் பட,

இவன் தான் இனி பேச வேண்டும். இவன் வாய் திறந்தால் தான் என் குழப்பங்கள் தீரும் என்று எண்ணி உமா காத்திருக்க,

சத்யன் இனியாவது பேசுவானா??!!!"

தொடரும்......

-அர்பிதா💖


 

அர்பிதா

Moderator
Staff member
உன்னுள் உறைந்தேனே பிரியசகி 8

உள்ளே வந்தவன் நேரே கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டு உமாவின் முகத்தையும் கூட பார்க்காமல், கைபேசியை எடுத்து நோண்டி கொண்டு அதில் மூழ்கி போக, உமாவிற்கே கோவம் வர,

கட்டிலில் இருக்கும் தலையணையை எடுத்து அவனை சரமாரியாக தாக்கியவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவளை பின்னால் இருந்து அணைத்த படி தன்னோடு சேர்த்து அமர வைத்தவன்,

"எதுக்குடி இப்டி அடிக்குற.. இப்போ உனக்கு என்ன வேணும்?" என்றான் எதுவும் தெரியாதவன் போல, உமாவை கழுத்து வளைவில் தன் முகம் புதைத்த படி.

திரும்பி அவனை முறைத்தவள் அவனை மேலும் தாக்க முயற்சிக்க,

"சரி கேளு.. இன்னைக்கு உன் கேள்வி எல்லாத்துக்கும் நான் பதில் சொல்லுறேன்" என்றான் நிதானமாய்.

"இதெல்லாம் என்ன... என்ன நடக்குதுன்னு எனக்கும் ஒன்னுமே புரியல.. திடீர்னு எவனோ வரான் என்னை கல்யாணம் பணிக்க போறான்னு சொல்லுறான், அங்க காட்டுல விலங்கு எல்லாம் பேசுது, அந்த பெரிய நாகம் என்னை கொல்ல வருது, அப்புறம் அதுவும் அழுகுது, இதெல்லாம் என்ன, எனக்கு இப்போவே எல்லாம் தெரிஞ்சாகணும்" என்றாள் சிறு பிள்ளை போல் முகத்தை வைத்து கொண்டு.

அதில் அவளை கொஞ்ச மனம் விழைய, அதற்கு இது நேரம் அன்று என்று புரிந்தவன்,

"நீ இதுவரைக்கும் என்ன, என்ன பார்த்த.. அதை சொல்லு" என்றான் சத்யன்.

விபத்தில் இருந்து தான் கண்ட காட்சிகள் மொத்தத்தையும் அவள் கூறி முடிக்க, அதை கேட்டு யோசனையில் ஆழ்ந்தவன்,

அறையில் இரண்டு மயில்கள் இருக்கும் புகைப்படத்தில் அருகில் இருக்கும் அந்த தங்க கம்பியால் சுற்ற பட்ட மயிலிறகை கவனித்தவன்,

"அந்த மயிலிறகை எடுத்துட்டு வா" என்றான் உமாவிடம்.

உடனே அதை எடுத்தவள் சத்யனுடன் வந்து அறைந்து கொள்ள,

"இப்போ அதை பிரி" என்றான் அவளை குழப்பும் வண்ணம்.

"எப்படி" என்று விழித்தவளின் கையில் இருக்கும் அந்த இறகை வாங்கியவன்,

அதன் தங்கக்கம்பியை பிரித்து.. அதை நேராக்கி, அதன் கடைசியில் தெரியும் வெள்ளை நிறத்து நூல் போல் ஒன்றை பிடித்து இழுக்க,

அந்த தங்கம் கம்பனியில் இருந்து கையால் தீட்ட பட்ட ஓவியம் ஒன்று வெளி வந்தது.

அதை கண்ட உமாவிற்கு, "இது என்ன படம்.. அதுவும் இந்த கம்மிக்குள் எப்படி ஒளிந்து இருந்தது" என்றவளின் கண்ணில் மிரட்சியே சத்யனை பேச வைத்தது.

"இது உன்னோட படம் தான்... நான் உன்னை ஓவியமாக்கி உனக்கு கொடுத்த இறுதி பரிசு" என்றவன் உமாவை பார்க்க, அப்போதும் குழப்பம் குறையாமல் இருக்கும் அவளின் விழியை படித்தவன்.

"இந்த படத்தை பாரு, உனக்கே எல்லாம் புரியும்" என்ற படி அதை அவளின் கையில் வைக்க.

முகத்தில் சிரிப்பும், கண்ணில் மகிழ்ச்சியுமாக ஆகாய நீலத்தில் பட்டுடுத்தி, பிறை நெற்றியில் புலி வடிவ பொட்டிட்டவள், தான் சோழ சிற்றசரின் அடுத்த ராணி என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தாள்.

அவள் தலையில் மின்னும் கிரீடமும், இடுப்பு வளைவில், வளையாமல் இருக்கும் வாளும், பாதத்தை காத்த காலணிகளும் என்று வீரமும், நேசமும் பொங்க நின்று இருந்தாள் உமைரா தேசத்தின் ராணி உமையாள்.

அந்த புகைப்படம் மேலும்
தன்னிடம் எதையோ பேச வருவது போன்று அவள் உணர, தன் கவனத்தை மொத்தமும் அதில் ஆழ்த்தியவள் கண்ணிற்கு அதே காட்சி அலைகள் படலம் எடுக்க துவங்கின.

நீல பட்டில்.. கேசம் அழகாய் கொண்டையில் முடிக்க பட்டு, கேசத்தை மறைக்கும் பூவும், கொண்டையை அலங்கரிக்கும் கிரீடமும், மான் விழியில் மையும், உதட்டில் சாயமும் என்றுஅலங்கரிக்க பட்ட அவளுக்கு முகத்தில் சந்தோஷமும், கண்ணில் உற்சாகமும் தான் சுத்தமாக இல்லை.

மனதை வாட்டும் பல எண்ணங்கள் அவளுள் ஓடி கொண்டு இருக்க, முகம் சோர்ந்தே அமர்ந்து இருந்தாள் உமையாள்.

தன் கையில் இருக்கும் அந்த நீல வைரத்தை பார்க்க பார்க்க, சத்யனின் வார்த்தைகளும் அவனின் நியாபகமும் வர,

"ஆதிரா போல் நானும் உன்னுடன் எங்காவது சென்று இருக்க கூடாதா.. இந்த நாள் என் வாழ்வில் வேண்டாம்.. இந்த ராஜா போகம் எதுவும் எனக்கு வேண்டாம்.. சத்யனுடன் வாழும் வாழ்வே எனக்கு போதும்" என்றவளின் மனக்குமுறல்களை கூறி அழ, ஆதிரவும் இல்லாமல் போக, வருத்தத்துடன் அவள் அமர்ந்து இருக்க,

அப்போது அந்த ஜன்னல் பக்கத்தில் இருந்து எதோ சலசலப்பு கேட்க, பார்வையை அவ்விடம் திருப்ப,

இரண்டடுக்கு பாதுகாப்பை தாண்டி, அவள் முன் வந்து நின்றான் சத்தியசீலன்.

வந்தவன், திருமணத்திற்கு தயாராக இருக்கும் அவளை ஆசை தீர இறுதியாய் கண்டவன், வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க,

"என்னை இங்கு அழைத்து சென்று விடு.. நான் உன்னோடு வாழ விரும்புகிறேன்" என்றாள் உமையாள், முதல் முறை தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக.

அதில் மகிழ்வதா, வருந்துவதா என்பது புரியாமல் அவளையே அவன் பார்த்து கொண்டு நிற்க.

அவனின் கையை பற்றியவள், "வா சென்று விடுவோம்" என்ற படி அவனை இழுத்து கொண்டு நடக்க, அதில் அவளை தடுத்தவன்,

"நாட்டின் ராணி, நாட்டை நிர்கதியாக கயவர் கையில் கொடுத்து விட்டு தன் நலனுக்காக தப்பித்து போவது நியாயமா? இது தான் ராணியின் கடமையா? வேண்டாம் உமையாள், உன்னை இவ்விடம் விட்டு அழைத்து செல்ல நான் வர வில்லை... இறுதியாய் என் காதலியை கண்டு செல்லவே வந்தேன்" என்றவன் குரல் வாட, மேலும் தொடர்ந்தவன்,

"நீ வேறு ஒருவரை மணப்பதை பார்க்கும் துணிவு என்னுள் இல்லை... அதனால் இன்று நான் இந்த நாட்டை துறந்து பரதேசம் செல்ல போகிறேன்" என்றவன் தன் கையில் இருக்கும் மயிலிறகை அவள் கையில் கொடுத்தவன்,

இது என் காதல் பரிசாக இருக்கட்டும், என்றவன் இருமுறை அவளின் பிம்மத்தை தன் மனதில் ஆழ பதிய வைத்து அவ்விடம் விட்டு சென்றும் விட்டான்.

அவன் செல்லவும், உமையாளின் அறை கதவு திறக்க படவும் சரியாக இருக்க, உமையாலும் மணவறை அழைத்து செல்ல பட்டாள்.

அலங்கரிக்க பட்ட மண்டபமும், ராணியை வரவேற்கும் கூட்டமும் சூழ, அழைத்து வர பட்ட உமையாளின் பார்வை மொத்தம் வாசலில் தான் பதிந்து இருந்தது.

நாட்டு கடந்து செல்வதாக சத்தியசீலன் கூறி இருக்க, "அவன் சென்று விட கூடாது" என்று விரும்பிய படி அவள் வாசலை பார்க்க,

அதற்குள் மண்டபத்தை அடைந்து, சம்யுக்தன் அருகில் அமரும் படி கூறினார் நாயகி.

மனதில் சத்யசீலனும், அவன் மேல் பொங்கும் காதலும் அலைகடல் என திரண்டு ஓட, இதில் சம்யுக்தனை மணக்க எவ்வாறு முடியும் உமையளால்.

மனதிற்கும் மூளைக்குள் இடையில் நடந்த அந்த யுத்தத்தில், மனமே வெற்றி கொண்டு, எதையும் யோசிக்காமல் மண்டபத்தை விட்டு இறங்கிய உமையாள், நேரே தன் தந்தை உமையத்தேவனிடம் சென்று அவரை கட்டி தழுவி அழ,

அவள் செயலில் திடுக்கிதவர், "என்ன உமையாள்? எதற்கு இந்த கண்ணீர்" என்றார் பதட்டமாக.

"எனக்கு இந்த திருமணம் வேண்டாம் தந்தையே, எனக்கு சம்யுக்தனை மணக்க விருப்பம் இல்லை, நான் சத்யசீலனை தான் மணக்க விரும்புகுறேன்" என்றாள் அழுத படி.

அதில் கோவம் உற்ற சம்யுக்தன் மண்டபத்தை விட்டு இறங்கி உமையாளை நெருங்கினான்,

"உன் நடவடிக்கையில் எனக்கு முன்பே சந்தேகம் இருந்தது உமையாள்.. நீ அந்த தேரோட்டியின் மகனுடன் பேசுவதும், சிரிப்பதும் நான் கவனித்தே வந்தேன்... திருமணம் வரை அமைதி காக்கவே நினைத்தேன்" என்றான் ஆக்ரோஷமாக.

அதில் கோவம் உற்ற உமையத்தேவன், "என் மகளிடம் மரியாதையுடன் பேசவும் சம்யுக்தா... வார்த்தையில் மரியாதை தவறினால் தண்டனை நிச்சயம் உண்டு" என்ற படி கர்ஜித்தார் அவர்.

அவரின் இந்த பேச்சில் செய்வதறியாது, கை விட்டு செல்ல இருக்கும் நாட்டை காத்து கொள்ளும் வழி அறியாது அவன் இருக்க,

நாட்டின் மக்கள் சூழ்ந்த அந்த சபையில், தன் வாளை எடுத்து நாட்டின் அரசனான உமையதேவன் கழுத்தில் வைத்து, யாரும் நினைக்காத வேளையில் அவரை சிறை புடித்தான் ஒலிவேந்தன்.

அவரை மிரட்சியுடன் பார்த்து கொண்டு இருந்த உமையாளிடம் திரும்பியவன்,

"உன்னை மணப்பது எங்களின் நோக்கம் அல்ல.. உன் வழியில் இந்த நாட்டை கை பற்றுவதே எங்கள் திட்டம்... வளமும் செல்வமும், மண்ணுக்குள்ளும், மண்ணிற்கு வெளியும் அதிகம் கொட்டி கிடைக்கும் இந்த சிற்றூர் தான் எங்களின் இலக்கு" என்றான் பேச்சில் வன்மம் அதிகம் தெரிந்த படி.

அந்த நேரம் சபையில், யாரும் கவனிக்காத படி நுழைந்த சத்தியசீலன்,

ஒலிவேந்தன் அசரும் நேரம் அவரின் தலையில் கட்டையால் அடித்து, பின் உமையதேவனை, ஒலிவேந்தன் பிடியில் இருந்து காப்பாற்றிய சத்தியசீலன்,

"உமையா, இங்கு இருந்து ஓடி விடு" என்றான் ஒரு கையில் உமையதேவனை பற்றிய படி.

"இல்லை நான் செல்ல மாட்டேன், உன்னை விட்டு செல்ல மாட்டேன்" என்றாள் திடமாக.

"எனக்கு ஒன்றும் நேராது. நான் பின்னால் வருகிறேன்.. நீ முதலில் செல்" என்று அவன் கூற.

உமையதேவனும் அவளை அங்கிருந்து செல்லும் படி கூற, "சரி" என்றவள் அவ்விடம் விட்டு ஓட்டம் எடுக்க.. அவளை துரத்திய படி பின்னால் சென்றான் சம்யுக்தன், ஒலிவேந்தனின் கூற்றுக்கு இணங்க.

சத்தியசீலன் கூறியதை போன்று உமையாலும் தன் ஓட்டத்தை எடுக்க, தன்னை பின்னால் யாரையோ துரத்தும் சத்தம் மட்டும் அவளுக்கு விடாமல் கேட்டு கொண்டே இருக்க,

தன் ஆடையால் சிக்கி கீழே விழுந்து விட கூடாது என்பதற்காக, அதை ஒரு கையில் பற்றியவள், மறு கையில் சத்யன் அளித்த அந்த மயிலிறகை பற்றிய படி ஓடி கொண்டு இருக்க,

அவளின் கால் ஓட்டத்தை அடக்கும் வண்ணம், எறிவளைதடு அவள் காலை பதம் பார்க்க, வலியில் துடித்த படி அவள் கீழே விழ,

அந்த நேரம் அவளை தன் சிறைக்குள் பிடித்து கொண்டான் சம்யுக்தன்.

"என்னை நெருங்காதே சம்யுக்தா.. அங்கேயே நில்" என்றாள் காலில் வலியால் அமர்ந்த படி.

"வா உமையாள் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றான் அடாவடியாக.

"நான் உன்னை நல்லவன் என்று நினைத்தேன்.. ஆனால் நீ இப்டி நடந்து கொள்வாய் என்று சற்றும் எதிர் பார்க்க வில்லை" என்றாள் ஆற்றாமையோடு.

"இன்றும் நான் நல்லவன் தான் உமையாள்.. உன்னை மனம் முடிப்பதே என் எண்ணம்.. பின் இந்த நாட்டை ஆள்வதே எங்கள் குறிக்கோள்" என்றான் சம்யுக்தன்.

"உன் திட்டம் நிச்சயம் நிறைவேறாது..அதை நான் நிறைவேறவும் விட மாட்டேன்" என்றாள் உமையாள் உறுதியாக.

"ஹா..ஹா.. ஹா..." விஷமத்துடன் சிரித்தவன்...

"உன் தங்கை ஆதிரை எங்கு இருந்தாலும் தேடி கண்டு பிடித்து வந்து, அவளை திருமணம் செய்வேன்... உன்னை கொன்ற பின்" என்றவனின் பார்வையில் வஞ்சம் அளவிற்கு அதிகமாகே இருந்தது.

"என் தங்கையின் பெயரை உச்சரிக்கவும் செய்யாதே.. அவளை நெருங்குவதை பற்றி யோசிக்கவும் வேண்டாம்" என்றாள் அதுவரை இல்லாத சீற்றத்துடன்.

"நிச்சயம் அதை செய்வேன்... அதற்கு முன் நீ இறக்க வேண்டாமா!!!" என்றவன், தன் உதவி ஆள் கையில் இருக்கும் பெரிய இரும்பு சுத்தியலை வாங்குபவன், உமையாளை நோக்கி அடிக்க,

நூலிழையில் அதில் இருந்து தப்பித்தவள், அங்கு இருந்து எழுந்து ஓட முயற்சிக்க,

சம்யுக்தனின் வாள் அவளை தாக்க முயற்சிக்க, அந்த நேரம் உமையாளின் ஆபத்பாந்தவன் வந்து சேர்ந்தான் அவளை காக்க.

சத்யசீலன், சம்யுக்தனையும் அவனின் படையையும் சமாளித்து கொண்டு இருக்கும் நேரம்,

உமையாளை கவனிக்காமல் அவன் விட்ட சிறு இடைவெளியில், சம்யுக்தனின் வாள் அவளின் வயிற்றை பதம் பார்த்து உடலை கிழித்து மறு புறம் வெளியே வந்து நின்றது.

"உமையா" என்று அவன் கத்தி முடிப்பதற்குள், உமையாளின் ஜீவன் அவளின் உடலை விட்டு பிரிந்து இருக்க,

உடல் பிண்டமாக மண்ணில் சரியும் அவளை தன் கைகளால் எந்தி.. அவன் உயிர் கரையும் வரை அவன் அழுது தீர்க்க,

தலைவி அவளை பிரிந்தவன் இவ்வுலகில் வாழ்வதெதற்கோ, என்று எண்ணிய ஒலிவேந்தன்.

அவனையும் கூர் வாளால் தாக்க, உயிர் துறந்த இருவரும், வானில் ஜீவனாய் கலக்க,

இருவரின் உடலையும் அந்த ஆற்றில் விட்டு வீசினான் ஒலிவேந்தன்.

தங்கள் இறப்பை தானே காணும் காட்சி படலம் முடிவடைய,

"சத்யா, நாம் இறந்து விட்டோம்... உன்னையும் என்னையும் கொன்று விட்டான் ஒலிவேந்தன்" என்ற படி உமா துடிக்க.

அவளை அமைதி படுத்தியவன்,

"இவை அனைத்துமே நாம் முதல் சந்திப்பின் வாழ்க்கை தான்... இதை போல் எத்துணையோ ஜென்மங்கள்" என்றான் சத்யன், விரக்தியாய்.

"பல ஜென்மமா... அத்தனை பிறவிலையும் என்னை காப்பாத்தாம சாக விட்டு இருக்க? இது தான் உன் காதலா" என்றாள் உமா.

"ஹா... ஹா..." என்று சிரித்தவனை முறைத்தவள்.

"இதே விஷயத்துக்கு சண்டை போட்டு உன்ன சமாதானம் பண்ண போகுற அப்போ தான், உனக்கு விபத்து ஆச்சு... இப்போ மறுபடியும் அதையே ஆரம்பிக்குறே" என்றான் விளக்கமாக.

"அப்படியா" என்றவளை,

"ஆம், இதே போல் உனக்கு காட்சிகள் தோன்றி, உனக்கு எல்லா உண்மையும் தெரிந்த போது தான், நீ கோவித்து கொண்டு விபத்தும் நடந்தது" என்றான் சத்யன்.

"சரி இப்போ சொல்லு... என்ன இதெல்லாம்... மொத்தமா என்ன நடந்ததுனு சொல்லு" என்றாள் உமா, அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு.

முதலில் இருந்து அனைத்தையும் கூற துவங்கினான் சத்யன்...


கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்..👇👇👇


 

அர்பிதா

Moderator
Staff member
உன்னுள் உறைந்தேனே பிரியசகி 9

"உமைரா சிற்றரசு" காவேரி நதி கரையின் ஓரம் பச்சை பசுமை கொஞ்சி குலவ, செல்வம் செழிப்பும் குறைவில்லாமல், மகிழ்ச்சி பொங்க திகழ்ந்த நகரம் தான் அது.

கரிகால சோழன் ஆண்ட காலத்தில், அவனின் அன்பை பெற்ற சிற்றூரில் ஒன்று உமைரா.. உமையத்தேவனிடம் அதன் ஆட்சி அனைத்தயும் கொடுத்த கரிகாலன், அதன் பின் தேவை அற்று சிற்றூரின் விஷயத்தில் தலையிடுவதையும் தவிர்த்தே வந்தான்.

உமையத்தேவன் மீது அவனுக்கு நம்பிக்கையும், பிரியமும் அதிகமாகே இருந்தது..

பல காலம் ஆட்சி சிறப்புற சென்று கொண்டு இருக்க, உமையத்தேவனுக்கு இரண்டாம் மகள் ஆதிரை பிறந்த சில தினங்களில் அவரின் மனைவி அவரை விட்டு பிரிய, மகள்களின் நலன் கருதி வேறு திருமணம் செய்யாமல், தன் மூத்த மகளான உமையாளை தன் அடுத்த வாரிசாக அறிவித்தார் உமையத்தேவன்.

பெண்ணை அடுத்த வாரிசாக அறிவிக்கும் முதல் மன்னன் இவன் தான் என்பதால், உமைராவை ஒட்டி உள்ள ஒரு சிறு கிராமத்தை, அவரின் முடிவுக்கு பரிசாக அளித்து பாராட்டினார் கரிகாலன்.

உமையத்தேவனுக்கு ஒரு தங்கை உண்டு.. பெயர் நாயகி.. அவரின் கணவன் ஒலிவேந்தன்...

தேரோட்டியாக இருந்த அவனை தன் தங்கை காதலிக்க, வேற்றுமை பார்க்க விரும்பாத உமையத்தேவன் இருவருக்கும் மனம் முடித்து, அடுத்த புரட்சியும் செய்து வைக்க, அதன் வாரிசாக பிறந்தவன் தான் சம்யுக்தன்.

ஆனால் ஒலிவேந்தனுக்கு நாயகி மட்டும் மனைவி இல்லை... பலரை தன் மனைவியாக்கி கொண்டாலும், ராஜ்யத்தின் ஆசையால் நாயகியை வெறுத்து ஒதுக்காமல் வைத்து இருந்தார்.

அனைத்துமே அவர் திட்டமிட்ட படி தான் சென்று கொண்டு இருந்தது... உமையாவிற்கும், சம்யுக்தனுக்கும் நாயகியை வைத்து சம்மந்தம் பேச வைத்தவன்... கூடிய விரைவில் அவர்களின் திருமணம் முடித்து ராஜ்யத்தை தன் கட்டுக்குள் கொண்டு வர முடிவும் செய்தான்.

அதற்காக தன் மகனின் மனதிலும் நஞ்சை விதைக்க ஆரம்பத்திவன், அவன் மனது முழுதும் விஷமாகும் வரை விட வில்லை.

எல்லாம் சரியா போய் கொண்டு இருக்கும் போது தான், யாரும் எதிர் பாராத வண்ணம், உமையாளும், சத்யசீலனும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதல் வய பட்டு சுற்றி திரிய..

ஆதிரையும் கூட காதலித்தவனுடன் ஓடி விட, விரைவில் உமையாள், சம்யுக்தன் திருமணம் நடத்த அவர் முடிவு எடுத்த போது தான் இருவரின் காதல் சபைக்கு வந்தது.

தன் இத்துணை நாள் திட்டம் எல்லாம் பாழாய் போனது என்ற எண்ணமே அவரை கடும் கோவம் கொள்ள வைத்தது... ராஜ்யம் தனக்கு சொந்தமாக வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்.

ராஜ்யத்தின் பால் அவருக்கு இருந்த ஈர்ப்பு வெறும் பதவி, பணத்திற்காக மட்டும் இல்லை.

உமைரா ராஜ்யத்தின் பூமிக்கு அடியில், "தாமிரம்" என்ற தாது அதிக அளவில் கிடப்பதாகவும், அதை வெளியே எடுத்து உருக்கி விற்றால் பல யூகங்கள் கடந்து வாழ செல்வமும், செல்வாக்கும் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே அவர் ராஜ்யத்தை கைப்பற்ற ஆசை பட்டது.

சோழ கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ராஜ்யத்தில் தான் அந்த தாது அதிகம் இருப்பதால், ஐரோப்ப வணிகர்களின் கண் அதன் மேல் பட,

ஒலிவேந்தனை வைத்து அதை அடைய ஆசை பட்டவர்கள் அவருள் ஆசை பசியை தூண்டி விட, அது படு கட்சிதமாக வேலையும் செய்தது.

உமையத்தேவனிடம் கூட பல முறை பூமியில் இருந்து தாமிரம் எடுக்கும் திட்டத்தை பற்றி பேசினார் தான்.. ஆனால் உமையத்தேவனோ,

அந்த தாதை எடுக்க, நிலத்தடி நீரை அசுத்தம் செய்வதோடு, சில நாட்களில் நிலைத்தடி நீர் குறைந்து விடும் என்பதை வேறு தெரிந்து கொண்டவர், மக்களுக்கு இது ஏத்த திட்டம் இல்லை... வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் முடித்தும் விட்டார்.

இனி இவரிடம் பேசி பயன் இல்லை என்பதை புரிந்தவன் கையாண்ட குறுக்கு வழி தான், உமையாள் சம்யுக்தன் திருமணம்..

பல காலமாக சம்யுக்தனை இதற்காக தயார் படுத்தி வைத்து இருக்க... வெண்ணை திரண்டு வரும் போதும் பாத்திரம் உடைந்தது போல் ஆகியது அவரின் கதை.

அதில் ஆத்திரம் அடைந்தவர், இருவரையும் கொன்று விட.. உமையதேவனும் கூட ஒலிவேந்தனின் வாளிற்கு இறையானான்.

அனைத்தையும் கூறும் போதே சத்யன் கண்களில் நீர் கோர்க்க,

"அப்போ நம்ப செத்ததுக்கு அப்றம் நாடு அவர் கைக்கு போய்டுச்சா? அவர் எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டாரா? அதுக்கு அப்றம் என்ன நடந்தது?" என்றாள் உமா ஆர்வமாக, கண்ணின் கண்ணீராய் துடைத்தவன், வெற்று புன்னகையுடன்.

"இல்லை, நம்மளை கொன்ன அப்பறம் கூட அவனோட எண்ணம் நிறைவேறவில்லை..

நம்மை கொன்றவன் நாட்டை ஆளும் கனவோடு திரும்ப,

அங்கு அவனை அழிக்கும் கோவத்தில் படையுடன் வந்து இருந்தான் கரிகாலன்.. உமையாள் திருமணத்தை பார்க்க வந்தவன், வழியில் கொள்ளையர் கூட்டத்தை முற்றுகை இட்டு அழித்து விட்டு உமைரா சாம்ராஜ்யம் அடைய தாமதம் ஆக, அதற்குள் இங்கு அனைத்தும் முடிந்து போனதை அறிந்தவன், ஒலிவேந்தனை கொன்றே விடுவது என்று முடிவெடுத்தான்.

கரிகாலன் படைகள் முன் ஒலிவேந்தன் எம்மாத்திரம்.. அவனின் அக்கினி பார்வைக்கே சரண் அடையும் ராஜ்யத்திற்கு முன் தனி ஆள் எத்துணை காலம் தாக்கு பிடிக்க முடியும்...

அடுத்த சில நாட்களிலேயே ஒலிவேந்தனை கொன்று மண்ணில் சாய்த்தான் கரிகாலன்...

அதன் பின், நாட்டை விட்டு சென்ற ஆதிரை மற்றும் மதிமாறனை தேடி கண்டு பிடித்து, உமைராவின் அடுத்த ராணியாக ஆதிரையை நியமித்தார் கரிகாலன்.

அவனின் பேராசைக்கும், உமையத்தேவன் வம்சம் அழிந்ததற்கும் காரணமாக இருக்கும் அந்த நில பரப்பை பார்த்தவன், இனி இந்த நிலத்தை ஆளாவோ, அழிக்கவோ யாருக்கும் எண்ணம் தோன்ற கூடாது என்றுஎண்ணியவன்,

சுற்றி ஓடும் காவேரி நீர் படுகையை உமைரா ராஜ்யத்தின் பக்கம் திருப்பி விட்டு, அதிக தாது இருக்கும் இடத்தை மலைகள் ஆக்கி, அந்த தாது இருக்கும் பூமியில் மனிதனின் கால் கூட பட கூடாது,

இல்லை என்றான் பல ஒலிவேந்தன் உருவாக காரணம் ஆகி விடும் என்று எண்ணியவன், பல காலம் அரும் பாடு பட்டு, காத்திருந்து,

இந்த உலகில் ஓடும் ஆற்று படுகை நீரில், அணையை கட்டி, மனிதன் கால் அந்த பூமியில் படாமல் இருக்கும் படி தவிர்த்தான்.

இன்றும் கல்லணை கரிகாலனை போற்றுகிறதே தவிர, அவன் வைத்த ஒரு கல்லும் இது வரை ஆடவும் இல்லை, அணையை கட்டிய அவனின் கொள்கை அசையவும் இல்லை

"ஓ..ஓ" என்ற படி உமா இருக்க... ஆனாலும் அவளுள் கேள்விகள் தான் குறைந்த பாடில்லை.

"அப்போ அந்த காட்டில நம்ப இருக்க மாதிரி வந்த காட்சிகள்.. அப்புறம் அந்த சிவப்பு நாகம்.. இதெல்லாம் என்ன? என்றாள் அடுத்த கேள்வியை கேட்ட படி.

"திருமண மேடையை விட்டு நீ ஓடின அப்றம்... உங்க அப்பாவையும் அவன் கொன்னுட்டான்... அதுக்கு அப்புறம் நானும் உன்னோட ஓடி வந்துட்டேன்... அப்போ தான் அந்த அருவில குதிச்சி... அப்பறம் காட்டுக்கு போனது எல்லாம் நடந்தது... அங்க இருந்த ரெண்டு நாளில் தான் நான் உன்னை திருமணமும் பண்ணிக்கிட்டு, உனக்கு அந்த ஓவியத்தையும் கூட பரிசாக தந்தேன்.

நதியிலே விழுந்த உன்னை காப்பாத்துனது நிலவேந்தன்... ஒலிவேந்தனோட தம்பி... அவரும் நாட்டின் படையில் தேரோட்டியாக தான் இருந்தார்.. ஒலிவேந்தனின் குணம் புரிய வந்தவுடன்.. நாட்டை துறந்து காட்டில் வசிக்க வந்துட்டாரு...

நானும் பிறந்த போதே என்னோட அம்மா அப்பா போரில் மறைந்து விட காடே வீடுன்னு வாழ்ந்துகிட்டு இருந்தேன்... அப்போ எனக்கு போர் கலைகள் அத்தனையையும் சொல்லி குடுத்தது நிலவேந்தன் தான்.

அது இல்லாம, இறுதியாய் நாம கழித்த இரண்டு நாட்களுமே அவரின் பாது காப்பில் தான்..

நாம் இறந்த பின்னர், நமக்கு உதவி பண்ணினார் என்ற ஒரே காரணத்திற்காக, பூமியில் தவழும் பாம்பாகவே வாழனும்னு நிலவேந்தன் மந்திரவாதியை வெச்சி சாபம் குடுக்க...

எந்த காதலால் அந்த சாபம் வந்ததோ, அதே காதல் ஒலிவேந்தனை அழிக்கும் போது தான் அவருக்கு அந்தச்சாபம் விமோச்சனம் பெரும்.

அதனால தான் நம்ப இந்த ஜென்மத்துலயாவது ஒன்னு சேரனும்னு அவர் ரொம்ப அசை படுறாரு" என்ற படி அனைத்தையும் சொல்லி முடித்தான் சத்யன்.

அனைத்தையும் கேட்டவளுக்கு, இன்று சத்யனுடன் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், intha முறை முடிவு என்னவாக இருக்கும் என்ற எண்ணமே ஒரு பயத்தை அவளுள் ஏற்படுத்தியது

அந்த பயம் சத்யன் உள்ளும் இருக்கவே செய்தது

ஆனால் இம்முறை எதையும் இழந்து விட கூடாது என்பதில் அவன் உறுதியாக இருக்க,

அனைத்தும் அறிந்த காலம் தான், பொறுமை காத்து இருந்தது

கருத்துகளை இங்கே பதிவு செய்யவும் 👇👇👇


 
Top