கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 82 காதல் சொல்ல வந்தேன்❤️

✍️யோசி யோசி✍️
இருவரின் மனதிலும் காதல் வந்த பின்னும், இருவருமே மற்றவரின் மனதை அறிந்துக் கொண்டு தங்கள் காதலை சொல்ல காத்திருக்கும் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

முகிலன் :
தாயோடு நண்பனை போல பழகும் மகன், எல்லாரையும் மரியாதையோடு அழைக்கும் பாங்கு, வர்ஷாவின் மேல் வைத்த அன்புக்கு இறுதி வரை மரியாதை செய்தது எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

முகிலோடு(முகிலன்) சேரும் மழை(வர்ஷா)யாகிப் போக,
காத்திருக்கும் மழைமேகம் அவர்கள் காதல்!!
 

Abirami

Well-known member
KS 119 காவலனே நீ காதலன் ஆனாய்(ல்)❤️

✍️யோசி யோசி✍️
ஊரைக் காக்கும் காவலன் அவன், சந்தியாவின் காதலன் ஆகி போனான்... அவர்கள் இருவரின் காதல் போராட்டங்கள் நிறைந்த காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

சந்தியா மோகன் :
வக்கீலாக இருக்கும் வீரம் நிறைந்த பெண்ணவள். அவளின் காதலுக்கு வரும் எல்லா துன்பங்களையும் பொறுத்து காதலை அடைபவள். தன்னவனின் மேல் விழுந்த கரையினை துடைத்து ஏறிய போராடியவள்.

💌ஸ்லோகன்💌

பல சத்ய சோதனைகள், சதிகள் தாண்டி வாழும் இருவரின் காதலே
சத்யா சந்தியாவை சேர்த்து வைக்கும் காவலனாகிறது!!
 

Abirami

Well-known member
KS 30 நீயே காதலோவியம்❤️

✍️யோசி யோசி✍️
வண்ணமயமாக சித்திரத்தை தீட்டுபவனுக்கும் சித்தாரா என்னும் இசை காதலிக்கும் இடையில் இருக்கும் அழகிய காதல் ஓவியமே கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

இசை வண்ணன் :
தன் காதலின் மேல் அளவில்லாத நம்பிக்கை கொண்டு, காதலியின் தாழ்வு மனப்பான்மையை மாற்றி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டவன். தாயின் மேல் கொண்ட பாசத்தால் அவரை மதித்து வந்தவன். சித்தாராவின் லட்சியத்தை நிறைவேற்றியவன்.

💌ஸ்லோகன்💌

வண்ணங்கள் நிறைத்த சித்திரமானவனை சித்திரபாவையவள் இசையால் நிறைத்துவிட்டாள்!!
 

Abirami

Well-known member
KS 31 காதல் வானிலே❤️

✍️யோசி யோசி✍️
வானில் இருக்கும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை போல காதல் என்னும் வானில் சிறகடித்து பறக்க தான் காதல் மனது ஏங்குகிறது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

இளங்கோ :
காதல் மனைவியவளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தவன். அவள் இறந்த போதும் அவளை மட்டும் நினைத்து வாழ்ந்தவன். துன்பத்தை மட்டுமே பார்த்து துவண்டவனின் மனதில் இருந்த காதல் என எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

தன் நில(லா)வை சேர துடிக்கும் இளவரசன்(இளங்கோ) அவனின் காதல் வானமிது!!
 

Abirami

Well-known member
KS 32 இமைதேடும் காதலே❤️

✍️யோசி யோசி✍️
காதல் என்பது கண் போன்றது, காதலிப்பவர்கள் தங்கள் துணையின் இமை தேடி அதன் நிழலில் இளைப்பாறவே காத்துக் கிடக்க வைக்கும் காதல் இது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

பிரகலத்தன் :
பக்குவம் இல்லாத பருவத்தில் தன் மீது காதல் என்ற பந்தத்தோடு வந்தவளுக்கு சரியான திசையை காட்டியவன். காதலியின் மேல் கொண்ட அளவில்லாத காதலின் வெளிப்பாட்டை மறைத்து தட்டுத் தடுமாறினாலும் தடம் மாராதவன். தங்கள் அன்பை உரைத்தி அவளின் கைப் பிடித்தவன்.

💌ஸ்லோகன்💌

அவன் பூனை கண்களில் விழுந்த எழில்
அவன் மீசை முடிகளை இழுத்து
விளையாடும் பூனையாவாளோ!!
 
Top