கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 128 மெல்லினங்களால் ஆளும் மில்லினிய காதல்❤️

✍️யோசி யோசி✍️
மெல்லினம் படைத்த காதலில் இருக்கும் மெல்லிய ஆசைகளையும், கனவுகளையும் ஒருவர் மற்றவர் மேல் வைக்கும் மில்லினியத்தை தாண்டும் காதலே ஆளும்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ருத்ராதேவ் ஆதன் :
காதல் மனைவியை இழந்து வாடியவனுக்கு மூன்று மடங்காக திரும்பக் கிடைக்கும் பாசம், காதல் அதை அறிந்து சிரிக்கும் அவன் இதழ்கள். மில்லின காதலை ஆசையை சேர்த்து வைத்திருக்கும் காதலன். நிலாவை வருட ஏங்கும் ஆதவன்.

💌ஸ்லோகன்💌

காஃபியின் சிறு கசப்பும் தூய பாலில் கரைந்து இனிப்பாகுவதை போல
வாழ்வின் இழப்புகளை தூய காதலில்
கரைத்து மில்லியன மகிழ்ச்சியை
பரிசளித்தாள் ஆதனின் இன்னிலா!!
 

Abirami

Well-known member
KS 102 காதலால் கண்டுபிடி❤️

✍️யோசி யோசி✍️
தங்களின் உயிரான காதலை இழக்கப் போகும் நிலையில் இருக்கும் காதலர்கள் இருவரும் காதலைக் கொண்டு தங்கள் காதலை கண்டுப் பிடிக்கும் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

யாதவ் :
மிக மிக அழகான தங்கள் காதலை அடைந்து மகிழ்ச்சியில் திளைப்பவனின் சிரிப்பு அடகு வைப்படும் போது அவனின் கண்ணீர் துளிகள் அழகு, காதல் மனைவியை காப்பாற்ற போராடும் போராட்டம் அழகு, சில்லென வீசும் காற்று கூட அவர்களை பிரிக்காத வண்ணம் அவளை பார்த்துக் கொண்ட அவன் காதல் அழகு.

💌ஸ்லோகன்💌

ஒரு காதலில் வாழும் இரு காதலாக
யாதவ் ரஷ்மிகாவின் காதலின்
மறுப் பிறப்பாக
பிறந்தது விஷ்ணு மீராவின் காதல்!!
 

Abirami

Well-known member
KS 59 உருவமறியா உயிர் காதலே❤️

✍️யோசி யோசி✍️
உருவமறியா வயதில் முளைத்த காதல், யாரென்றே தெரியாமல் அதற்காக காத்திருக்கும் இருவரின் உருவமறியா முகங்கள் கொண்ட உயிர் காதலே உயரிய காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மகிழகரன் :
பெயருக்கு ஏற்ற மாதிரி எல்லாரையும் சிரிக்க வைப்பவன். பருவ வயது காதலை மறக்காது அவளை என்றாவது ஒரு நாள் தேடி தனக்கு துணையாக அவள் வருவாள் என காத்திருப்பவன். நல்லதை செய்தும் தீயதை அழிக்கவும் பிறந்த காதலில் சிறந்த காதலன்.

💌ஸ்லோகன்💌

அ(க்)னியாக அவளை தன்னோடு இணைத்து இனிமையான
ழகர(ன்) இலக்கியம் படைத்தான் கனிந்த
காதலின் காவலன்!!
 

Abirami

Well-known member
KS 111 முதன்முறை காதல் அழைத்ததோ❤️

✍️யோசி யோசி✍️
பாரதியின் மனதில் முதன்முதலில் காதல் வந்து முளைக்க காரணமாவனால் அழைக்கப்படும் தங்கள் முதல் காதலை அவனுக்கு வழங்கினாளா?? இல்லை மறுத்தாளா??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

தமிழ் :
தன் காதலை உணர்ந்த நாள் முதல் பொறுமையாக காதலுக்காக காத்திருந்தவன். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத காதலை பாரதியின் மேல் பொழிந்தவன். உறவுகளின் அன்புக்காக ஏங்கி அவர்களுக்கு மரியாதை செய்தவன்.

💌ஸ்லோகன்💌

பாரதி இயக்கிய தமிழ்ப் பாட்டுகளை விரும்பி படித்தவள்
தமிழின் பாரதியாகி போனாள்!!
 

Abirami

Well-known member
KS 78 நெஞ்சில் பூத்த காதலிது❤️

✍️யோசி யோசி✍️
காதல் ஏன் காலங்களை கடந்தும் வாழ்கிறது என்றால் மலராக மொட்டு விட்டு சுவையாக காயாக கனியும் காதல் நெஞ்சமென்னும் செடியில் வளர்வதால். இது நெஞ்சில் மொட்டு விட்டு மலர்ந்த காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அபிநந்தன் :
கண்டவுடன் காதலில் திளைத்த மனது, காதலியின் பிரிவால் வாடி வதங்கிய போதும் அவள் மேல் அவல்வில்லதா நம்பிக்கை கொண்டவன். முகில்நிலா என பெயர் வைக்க ஆசைப் பட்டு அவளை கண்டதும் தந்தை பாசத்தில் திளைத்தவன். தன் துருவுக்கு எல்லாமுமாக திழந்தவன்.

💌ஸ்லோகன்💌

முகில் துருவின் காதல் இதயங்கள் இணைந்து
அபி மதியின் இதயங்களை சேர்க்க
சேர்ந்தது நான்கும் ஒன்றாக!!
 
Top