கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 130 காதலுக்கு கண்ணும் இல்லை வயசும் இல்லை❤️

✍️யோசி யோசி✍️
அழகான வெவ்வேறு வயதை சேர்ந்தவர்களின் காதல்களின் கோர்வையான படைப்பு. காதல் யார் என்ன பார்த்து வராததால் அதற்கு கண்ணும் இல்லை, காதல் எல்லா வயதினருக்கும் எந்த வயதிலும் மனதில் இருப்பதால் அதற்கு வயதும் இல்லை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஆதிரா :
தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்மையான பார்த்து அதற்கு ஏற்ப திட்டம் தீட்டுபவள். அவளின் மனிதாபிமானம், திறமை, காதல், நாடகம் எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

அஷோக் ஆதிரா - விருப்ப காதல்!!
கண்ணன் ஜானு - வளர்ந்த காதல்!!
சம்யுக்தா வெங்கட் - வளரும் காதல்!!
வசந்தகுமார் மங்களா - வயோதிக காதல்!!
என காதலை வகைப் படுத்தினாலும்
காதலுக்கு கண்ணும் இல்லை வயசும் இல்லை!!
 

Abirami

Well-known member
KS 68 அம்மாடி இது தான் காதலா?❤️

✍️யோசி யோசி✍️
காதல் என்பது இது தான் இல்லை அது தான் இது தான் நான் காதலிக்க காரணம் இல்லை அது தான் என்பது போல இல்லாமல் ஒருவரை பற்றி நம்மை விட அதிகமாக நேசிக்கும் போது ஏன் அது என்று யோசித்தால் கிட்டுமே ஓ... இது தான் காதலோ? அதுவே காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

கண்ணன் :
காதலியை பிரிந்து வாடினாலும் அவளின் நன்மையை பற்றி யோசித்தது. காதல் என்பது இது தான் என எப்போதுமே ஒரு அழகான விளக்கம் சொன்னது. அழகை பார்த்துக் காதல் கொள்ளாமல் சிறு வயது முதல் அவளுக்கு நன்மை செய்து உயரிய காதல் புரிந்தவன்.

💌ஸ்லோகன்💌

கண்ணுக்காக மீராவின் காதலுக்கு ஏங்கியவனுக்கு,
மீராவை கொன்று தன்னையே பரிசளித்தாள் மினி!!
 

Abirami

Well-known member
KS 37 காலமெல்லாம் அவன் காதலில்❤️

✍️யோசி யோசி✍️
காதல் இல்லாத வாழ்க்கை நரகம்... அத்தகைய நரக வாழ்வை வாழ்ந்தவள் காலமெல்லாம் அவளின் அன்புக்குரியவனின் காதலில் வாழ ஆசைக் கொள்ளும் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

விருஷாலி :
பட்டாம் பூச்சியாய் சுற்றி திரிந்தவளின் வாழ்க்கை, குடும்பத்தால் திசை மாறிய போதும் அவர்கள் மேல் அன்பு கொண்டவள். யதுவின் செல்ல தாய். சிரிப்பை மறந்து வாடியவள், பல துன்பங்களை சந்தித்தும் துவலாதவள்.

💌ஸ்லோகன்💌

நரகத்தில் வாழ்ந்த ஷாலிக்கு காதலாலான உலகத்தை
தன் காதலைக் கொண்டு
காட்டியவன் தமிழ்மாறன்!!
 

Abirami

Well-known member
KS 40 காதலே காதலே தனிப்பெருந்துணையே❤️

✍️யோசி யோசி✍️
காலங்களை கடந்து வாழும் காதல் மட்டும் எப்பவும் காதலர்களுக்கு தனிப் பெருந்துணையாக திகழ்கிறது. ஆனந்தின் காதலுக்கு அவரின் காதலே தனிப் பெருத்துணை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அன்பானந்தம் :
பா என்ன ஒரு காதல்... வேற லெவல்... காதல் ஒன்றையே துணையாக கருதி வாழ்ந்தவர். சிறந்த தந்தையாக தன் மகனுக்கு பெரும் பாசத்தை பரிசரித்தவர். சேராத அவரின் காதல் என்றென்றும் வாழும்.

💌ஸ்லோகன்💌

அங்கை ஆனந்தன் மேல் பொறாமை கொண்ட காதல்
அவர்களின் காதல் மேல் மரியாதை கொண்டு சேர்த்தது
அவர்களை மரணத்தில்!!
 

Abirami

Well-known member
KS 77 விழிமாயம் செய்பவனின் காதலவள்❤️

✍️யோசி யோசி✍️
யாரோடும் பேசாது தனிமையில் வாழ்பவனின் விழிகளின் மொழி அறிந்து அவனை மகிழ்விக்கும் பாவையிடம் விழியால் மாயங்கள் செய்யும் காதலானவன் அவன்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஆத்விகா :
தன்னை சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக மாற்றும் மின்மினிப் பூ, தன் மாமனின் சிறு வயது துன்பங்களை போக்கி அவனுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் மீட்டுத் தந்தவள். அவனின் காதலுக்கு மரியாதை செய்தவள்.

💌ஸ்லோகன்💌

ஹர்ஷா விஹானை காதல் விழியில்
கட்டிப் போட்டு
அவனின் விழி வழி மனம் கொய்தவள்
அவனின் ஆத்விகா!!
 
Top