
யோசி யோசி
Ks-54 காதலின் மாயவொளி
காதலர்கள் ஆஷ்னா ஆதீஸ்வரன் (குப்பத்து காதலன் கோபுரத்தில் காதலி )
கல்லூரி படிக்க முடியாமல் வேலைக்கு செல்லும் ஆதி, காரில் மாட்டிக்கொண்ட சிறு பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைகிறான். அது முதலே ஆஷ்னாவின் ஆஷ்டான பாதுகாவலனாக இருக்கிறான் ஆதி. நாயகனின் தேவதை ஆகி போனால் ஆஷ்னா. இருவரும் உற்ற தோழர்களாக மாறினர். வாலிப வயதில் இருவரும் காதலை உணர்ந்த நிலையிலும் விசுவாசம் காரணம் எனக்காட்டி மறுக்கும் ஆதி.
அவன் வாழ்வில் உயர வேண்டும் என எண்ணி ஸ்டேட்டஸ் பார்க்கும் தாய்க்காக அவனை ஒதுக்குகிறாள் ஆஷு . விளைவு மனித மிருகத்துக்கு மனைவியாக போகிறாள். பெற்ற தாயின் சூழ்ச்சியால் ஒரு மாத காலம் நரக வாசம். காதலின் மாயவொலி அப்போது கூக்குரல் இட்டதோ என்னவோ, அவளின் நாயகன் வந்தான் மிருக பிடியில் இருந்து மீட்டான்.
அடியாலும் வார்த்தையாலும் காயப்பட்ட அவளின் உள்ளதை மாற்ற முடியாமல் அவதி படுகிறான் ஆதி . இனி அவளின்றி இருப்பது கடினம் என்று உணர்ந்து திருமணம் புரிகிறான்.
விதி செய்த சதியால் துவண்ட காதலியை தன் தூய காதல் கொண்டு மாற்றுகிறான். காதலர்கள் மனதில் கேட்கும் காதலின் மாயவொலியை அலட்சியம் செய்தால் விளைவு அதிபயங்கரம் என எண்ணி கதைக்கு


காதலின் மாயவொளி


என்று தலைப்பு வைத்து இருக்கலாம்
((பெண்கள் சந்திக்கும் அவலங்கள் பற்றி அதிகமா பேசி இருகாங்க எழுத்தாளர்


))