கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
யோசி யோசி :

Ks-108 மனதிலே காதலா

மூன்று காதல் ஜோடியின் காதல் கதை. சத்யா மதுவை காதலிப்பதை நீண்ட வருடங்கள் மறைத்து வைக்கிறான்.

தமிழின் காதல் கதை அவன் மனம் மட்டும் அறிந்த ஒன்று. நித்தியின் மாமன் சத்யாவிடம் கொண்ட விரோதத்தின் காரணமாக திருமணம் முடியும் வரை மறைகிறான்.

உதய் நித்தியுடன் கொண்ட காதல் கல்யாணம் நடைபெறா நிலைமையில் அவள் தங்கையை மணக்கிறான். அதன் பிறகு தான் தெரியும் ஹனியின் உயிர் காதலன் உதய் என்று.

மூன்று ஜோடியின் கதையிலும் அனைவரும் தங்கள் காதலை மனதிலே மறைத்து வைத்ததால் தான் எழுத்தாளர் "😍மனதிலே காதலா "💞 என பெயரிட்டுள்ளார்.
 

Sspriya

Well-known member
யோசி யோசி :

Ks-57 மெல்லின காதல்

கதையில் காதல் ஜோடி மகேஸ்வரி விக்ராந்தன்

வல்லினம் போல வன்மையாக வாழ்ந்து வருகிறாள் மகி, குழந்தைகளை வன்புணர்வு செய்யும் அரக்கன்களை கொன்று குவிகிறாள். அவர்களை கொல்வதையே குறிக்கோள் என வாழ்கிறார்.

அவள் வாழ்வை வசந்தம் ஆக்க வந்தவன் மகியின் "ஆனந்த்". மெல்லினம் போல மென்மையான காதலை அவளுள் ஊடுருவ செய்து, அவளின் லட்சியத்திற்கு நிரந்தர தீர்வுகாண போராடுகிறான். அதில் வெற்றியும் பெறுகிறான்.

வல்லின குணத்தை விடுத்து மெல்லின உணர்வான காதலை விதைத்து அவளை காத்தான் காதலன். ஆதலால் இக்கதைக்கு எழுத்தாளர் """💞😍மெல்லின காதல்💞 😍 ""என்று பெயரிட்டுள்ளார்.
 

Sspriya

Well-known member
Ks-38

💞ஸ்லோகன்💞 :

"😍தனக்கென எந்த ஆசைகளும் அற்ற ஒற்றை தாய் ஸ்ரீமகி

தன் மகனுக்காக மட்டும் வாழ நினைக்கும் பெண் இவள்

இவளுக்காகவே பிறப்பெடுத்தது போல எண்ணும் அன்பானவன் நம் நாயகன்💞 "

"💞😍திரோபதியை காக்க வந்த மாய கண்ணனை போல, ராம்
ஸ்ரீ யின் வாழ்வில் வந்த காதல் கண்ணன்

தன்னவளின் துயர் தீர்க்க வந்த தூயவன்"💞😍
 

Sspriya

Well-known member
Ks-26 காதல் நெஞ்சங்கள்

ஸ்லோகன்💞😍 :

💞😍படிப்பறிவு இல்லாத ஊதாரி மாறனை மாற்றும் நல்ல துணைவி மலர்

அவர்கள் வாழ்வில் உயர்வதை தடுக்க நினைக்கும் உறவினர்கள் சிலர்

பணம் ஒன்றே குறிக்கோள் என எண்ணி குடும்பத்தை பிரிக்க நினைக்கும் பலர்

விடா முயிற்சியால் வெற்றி காண ஓடிக்கொண்டு இருப்பவர்கள் இவ்விருவர்💞
 

Sspriya

Well-known member
Ks-55 உன் துயர் நீங்கும் என் காதலில்

ஸ்லோகன் :

1. திருமணத்திற்கு பார்ப்போம் வரன்

தன் காதல் கண்ணம்மாவுக்காக உருகுகிறான் நீரன்

2.திருவள்ளுவர் துணைவி வாசுகி

தனது வாழ்வில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவிக்குறாள் நாயகி
 
Top