கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 122 என் காதல் யட்சி❤️

✍️யோசி யோசி✍️
அழகிய மனம் கொண்ட காதல் தேவதை அவள். அவளின் காதலும் அவளின் நல்ல மனமும் எப்பாயும் அழியாது. அவளே என் முடிவில்லா காதல் தேவதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

கனி :
தன் மக்களை இழந்து வாடி அவர்களை காக்கப் போராடும் மகிழம் பூவின் வாசம் வீசும் நல்ல மனம். ஆதவனுக்கு உதவி அவர்களை காத்தது, அவள் காதல் சேராமல் போனாலும் அவன் மேல் வைத்த அளவில்லாத காதல் சூப்பர்.

💌ஸ்லோகன்💌

கனியின் காதல் முகம் பார்த்து கனிந்த அவன் மனம் அவளை காணாமல்
ஆதவனை பார்க்க ஏங்கும் தாமரையாக ஏங்கிப் கனிகிறது ஆதவனுக்கு!!
 

Ammu

Well-known member
மெல்லின காதல் கவிதை:


சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்

உனது வருகையே
நிர்ணயிக்கும்
எனக்கான
மணித்துளிகள்
உறைவதையும்
உருகுவதையும்
 

Ammu

Well-known member
காதலே சாதலாய் கவிதை:.


கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
 

Ammu

Well-known member
காதலின் மனசு கவிதை:


உன் புன்னகை வைத்த
பொறிகளுக்குள்
சிக்கித் தவிக்கிறது
என் கள்ள மனசு!!

தனித்திருந்தோம் மழைத் துளியாய்.
துளித்த பின்பு
சுழித்தோடுகிறது
நதியாய்
நம் காதல்!

எறும்பின் நகர்வாய்
ஞாபக ஊர்வலங்கள்….
இனிப்புச் சிதறலாய்
எனக்குள்
உன் சிரிப்பு!

மொழியின் முதுகில்
மௌனம் எழுதி விட்டுப் போன
காதல் கவிதையின் பேரிரைச்சல் பற்றி
நீ பாடு….
தேவதைகள் ஆடட்டும்!!
 

Ammu

Well-known member
காதலால் கண்டுபிடி கவிதை:

நான் பேசா வார்த்தையின் மொழியையும் மொழிபெயர்க்க தெரிந்தவன் என் அன்பு காதலன்.
 
Top