கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 28 காதல் துளிரே❤️

✍️யோசி யோசி✍️
இழப்பின் வலியில் பட்டுப் போன அவள் மனதில் மகிழ்ச்சியை தன் காதலால் துளிர்விட செய்து அவளோடு இணைந்தவன் அவன். மீண்டும் துளிர்க்குமோ காதல் துளிரானவள் மீதான அவன் காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஜீவானந்தன் :
காதலியின் மனதை புரிந்து அவளை விட்டு விலகியவன், அவளின் நிலை கண்டு மீண்டும் துளிர்த்த காதலால் அவளை இன்பமுற செய்யதவன். காதலோடு காதலால் வாழ்ந்தவனின் காதல் உள்ளம் செம்ம.

💌ஸ்லோகன்💌

துளிர்க்காதோ உன் மனதில் என் மீதான காதல்?? கிடைக்குமோ,
ஜீராவில் ஊறிய ஜிலேபியின் சுவையான தித்திப்பு!!
ஜீவ முல்லையின் இனிய மனம் விரும்பும் நற்மணம்!!
 

Abirami

Well-known member
KS 80 இரு துருவங்களின் காதல்❤️

✍️யோசி யோசி✍️
இரு வேறு மனநிலை, வளர்ப்பு, கருத்துகள், குணாதிசயம் கொண்ட இருவரின் காதல் கதை. துருவங்களின் இரண்டும் ஒன்றாக இணைந்தால் அவர்களின் காதலின் நிலை என்ன??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

விக்ரம் :
தன்னவளின் காதலை மறுத்து கடுமை நிறைந்த தோற்றம், குணம் கொண்டாலும் பாசத்தால் தூற்றப் பட்டும் போராடி வாழ்ந்து வந்தவன். விக்ரமின் காமெடி, அதிரடி, கலாட்டா, சவால் எல்லாமே நிறைந்த மனிதன்.

💌ஸ்லோகன்💌

துருவங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் நியதியை போல,
துருவங்கள் ஒன்றான சூழலில் உயிர் பெற்றது அவர்களின் காதல்கள்.
 

Abirami

Well-known member
KS 57 மெல்லின காதல்❤️

✍️யோசி யோசி✍️
காதல் தோன்றி விட்டால், முரடனும் சாதுவாகி விடுவானாம். காதலே ஒருவரை இங்கு மெல்லினமாய் மாற்றுகிறது. அத்தகைய காதலே மெலின்ன காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மகேஸ்வரி(மகி) :
பல்வேறு அநியாங்கள் நடக்கும் இந்த இந்த உலகில் தைரியமாக தட்டிக் கேட்டவள். ஆசாத்திய அமைதிக்கு பின்னான புயல் இவள். காதலை தவிர்க்கவும் முடியாமல் தன்னை அழித்து உலகத்தில் மிகப்பெரிய கடமையை நிறைவேற்றியவள்.

💌ஸ்லோகன்💌

தன் அதிரடி ஹனியானவளை தன்னோடு இறுக்கிப்பிடித்து
மெல்லினங்களால் மகிழ வைக்க ஏங்கும் ஆனந்தானவன் அவன்!!
 

Abirami

Well-known member
KS 129 என் காதல் பேசுமோ?❤️

✍️யோசி யோசி✍️
ஒரு உயர்ந்த புனிதமான காதலுக்கு பல சக்திகள் உண்டு, அதை கொண்டு எத்தனை தடைகள், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை தாங்கும் காதல்... எங்கள் காதல் தன் குரலை உயர்த்தி உண்மையை உரைக்குமா??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மித்ரேஷ்வரன் :
வாவ் இப்படி எல்லாம் ஒருவர் காதலிக்க முடியாம?? செம்ம லவ்...லவ் அண்ட் லவ் ஒன்லி😍🥰 தன் அருமையான அழகா காதலால் மனைவியை ராணியாக நடத்துபவன். அவள் கனவுகளை, ஆசைகளை நிறைவேற்றி சுகம் காணுபவன். அவள் மேல் விழுந்த கலங்கத்தை துடைத்து ஏறிந்தவன்.

💌ஸ்லோகன்💌

காதலில் ராணி(ஜா)யாக திகழும் ம(மி)துவின் காதலுக்கு வந்த
சோதனையை வென்று சாதனை
படைக்குமா அவர்களின் காதல்??
 

Abirami

Well-known member
KS 112 கானல் நீரோ காதல் பிழையோ❤️

✍️யோசி யோசி✍️
ஜென்ம ஜென்மமாய் காத்திருக்கும் தன் காதல் ஒவ்வொரு முறையும் கானல் நீராகிப் போக, பிறை மேல் ஆதான் கொண்ட காதல் பிழையாகி போகிறது. கானல் நீரான அவன் காதல் கைக் கூடுமா??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

பாரதி :
அவங்க பேசும் மொழி அண்ட் ரொம்பவே கலாட்டாவான பாத்திரம். கயல் மேல் கொண்ட உரிமை கலந்த காதல், ஆதனை கலாய்க்கும் விதம், ஆதனோடு ஒன்றி அவனுக்காக தவிப்பது. சிலுப்பியுடன் முட்டி மோதுவது, வேலனை கண்டால் சீறி எழுவது எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

தன்னுள் ஆதியாய் நுழைந்து பிறைகள் பல காணும்
செழியனின் கானல் நீரான நவீன காதல் பிழையே சினாமிகா!!
 
Top