கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 136 தொடரும் காதல்❤️

✍️யோசி யோசி✍️
இது காலங்களை கடந்து வாழும் காலெல்லாம் தொடரும் காதல் கதை. காதலர்கள் இணையாது போனாலும் காதல் மனம் இணைந்தே இருக்கும்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

பிரகாஷ் :
தன் காதலில் பொறுமையோடு நம்பிக்கையும் கொண்டவன். மீராவின் தவிர்ப்புகள், வெறுப்புகள் பல பெற்றாலும் அவளுக்கு நன்மை நினைப்பவன். காதலை கொண்டு மட்டும் பல ஆண்டுகள் வாழ்ந்தவன்.

💌ஸ்லோகன்💌

சேர்ந்தாலும் சேராமல் போனாலும் பார்த்தாலும் பார்க்காமல் போனாலும் வாழ்ந்தாலும் இறந்தாலும்
காதல் எந்நாளும் தொடரும்!!
 

Abirami

Well-known member
KS 48 மனதோடு காதல்❤️

✍️யோசி யோசி✍️
காதலியின் காதலை அறிந்து மனதோடு தன் காதலை புதைத்துக் கொண்டு சிரித்தவனின் காதல் உள்ளத்தை வெளிப்படுத்தும் அழகிய காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

தருண் :
கன்னியமான காதல் காளையவன், காதலியின் காதலை அறிந்து ஒதுங்கியவன். காதலியின் துன்பத்தை களைந்து அவளுக்கு உடன் இருந்து அவளை மாற்றியவன். துன்பத்திற்கு பின் வரும் வாழ்வை மகிழ்ச்சியை அவளுக்கு வழங்கியவன்.

💌ஸ்லோகன்💌

வாழ்வில் பலர் வருவார் சிலர்(சசி) துன்பத்தை பரிசளிப்பார்
சிலர்(தருண்) அழகான வாழ்வை தன்
காதலால் பரிசளிப்பார்!!
 

Abirami

Well-known member
KS 13 காதல் கைதி❤️

✍️யோசி யோசி✍️
போராட்ட வாழ்க்கையில் தன்னையே கைதியாக்கி சிறைக்குள் இருந்தவளின் விழிச் சிறையால் கைதியானான் அவளின் காதலன். மீண்டு வராத காதல் சிறைக்குள் மாட்டிக் கொள்ளும் காதல் கைதிகளின் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

கவின் குமார் :
இனிக்கும் தன் பேச்சால் அனைவரின் துன்பங்களையும் போக்குபவன். தாயின் கனவினை நிறைவேற்றவும் காதலியின் வாழ்வை வளமாக்கவும் முயன்றவன். அறியாமல் செய்த பிழையை திருத்திக் கொள்ள முனைந்தவன்.

💌ஸ்லோகன்💌

ராகாமாலிகாவின் ராகாங்களில் கைதான சிறைக் கைதி கவினவனுக்கு
காதல் மோட்சம் அளித்து விடுதலை செய்யும் நாள் எந்நாளோ??
 

Abirami

Well-known member
KS 39 சகலகலா காதல்❤️

✍️யோசி யோசி✍️
சகல வித்தைகளையும் கற்றுத் தந்து உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் மிஞ்சி கலக்க வைக்கும் ஒன்று தான் காதல். யார் இருவரின் வாழ்கையை மாற்றி கலக்கப் போகிறது என்பது தான் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஷிவ்யா :
கதையின் நாயகி பக்கமிருந்து அமையும் கதையில் அவளை பற்றி முழுதாக அறிய நேருகிறது. ஷிவ்யாவின் நல்ல குணங்கள், அவள் படும் துன்பங்கள், அவளின் நண்பர்கள், எல்லாவற்றையும் கையாளும் விதம் என எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

வல்லபன் அவனின் காதல் புறாவால்
பல துன்பங்களை கடந்து பறந்து செல்லும் ஜோடி புறாவாகிறாள் ஷிவ்யா!!
 

Abirami

Well-known member
KS 41 காதல் பார்வை❤️

✍️யோசி யோசி✍️
காதலுக்கு கண் இல்லை, காதல் வந்துவிட்டவர்களின் பார்வையில் காதலை தவிர வேறொன்றும் இல்லை. காதல் பார்வைகளால் வருடும் அழகிய காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

தாரா :
தமிழ் மேல் பற்று கொண்டு, இராணுவ அதிகாரிகளை போற்றுபவள். சந்திரனின் காதல் பார்வைக்காக ஏங்கி அவனின் வாழ்வின் பாதையை சீர் செய்தவள். தோற்றாலும் அது என் காதல் தான் யார் அதை பரித்தாலும் அது என்னுடையது என உறுதியாக நின்றவள்.

💌ஸ்லோகன்💌

ஊறு விளைவிக்கும் ஊர்மிளாவின் ஏளன பார்வையை பொசுக்கியது
சந்திரா தாராவின் காதல் பார்வைகள்!!
 
Top