கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 63 காதலும் கசந்து போகும்❤️

✍️யோசி யோசி✍️
காதல் மனங்கள் இணையும் போது இனிக்கும் காதலின் சுவை காதல் மனதின் துரோகத்தை தாங்காமல் கசந்துப் போகிறது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

லௌசி :
மிக மிக அழகான நேசத்தையும் காதலையும் தன்னுள் வைத்து தன் காதலனுக்காக காத்திருப்பவள். அழகி அவளின் அழகிய காதலை உணராது துரோகத்தை பரிசாகப் பெற்றவள். மனதை பிழிய வைக்கும் காதலால் எல்லோரின் மனதை பதைபதைக்க செய்தவள்(ஒரு வேஸ்ட் ஃபெல்லோவ அவன்😡🙄)

💌ஸ்லோகன்💌

இனிப்பால் நிறையும் எல்லாமும் பின்னர் கசப்பதை போல,
காதலில் இனிப்பை காட்டி வாழ்வை கசபாக்கியனை
காதலித்த துர்பாக்கிய சாலியவள்!!
 

Abirami

Well-known member
KS 90 இ.எம்‌.ஐ காதல்❤️

✍️யோசி யோசி✍️
நடுத்தர குடும்பத்தினர் வாங்கும் கடனுக்கு சிறுக சிறுக சேமித்து கட்டும் இ.எம்.ஐ பணத்தைப் போல, சிறுக சிறுக உள்ளத்தில் நுழைந்து பெருகும் இ.எம்.ஐயாலான காதல் இது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

இளமாறன் :
நட்பு, காதல், பாசம் மூன்றுக்கும் சரியான அளவில் முக்கியத்துவம் தருபவன். செய்யாத தப்பிற்கு வாழ்வில் துன்பப் பட்டு இ.எம்.ஐ வாழ்க்கை வாழ்பவனின் மனது, தனக்கு துன்பம் செய்தவர்களுக்கும் நல்லது செய்தது. காதல் ஈகோ, ஆகம்பாவம் ஏதும் இல்லாத காதலன்.

💌ஸ்லோகன்💌

மாறானின் இ.எம்.ஐ வாழ்க்கைக்குள் இருக்கும் பல துன்பங்களில் வரமாக வந்த இ.எம்.ஐ தேவதை(பிசாசு)யே ஸ்ரீ!!
 

Abirami

Well-known member
KS 25 காதல் கிளியே அழகிய ராணி❤️

✍️யோசி யோசி✍️
காதலில் எது அழகு? காதல் மனது புறத்தோற்றங்களின் அழகை காணாது பரந்து விரிந்த வானில் சுற்றி திரியும் கிளிகளாக மாற்றி விடும். காதலியவளை காதல் கிளியாக அழகிய ராணியாக காணும் காதலனின் காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

ஆதி :
பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காத ஆண் ஆதிக்க வர்கத்தினரும் காதல் வந்தால் தன் அழகிய ராணியை கொண்டாடுவார்கள். பல துன்பங்களை சந்தித்து தன் உயிருக்கு உயிரான காதலியை இழந்து, தன் துன்பத்தை பிறர் அனுபவிக்கக் கூடாது என நினைப்பவர்.

💌ஸ்லோகன்💌

காதல் கிளிகளாக பறக்கும் அபி ஜெனியின் அழகிய காதலால்
தன் காதல் கிளியின்(தீபிகா) சிறகு ஒடிந்ததால் வருந்திய ஆதியின்
காதலின் அழகிய ராணியாக வந்தது இன்னொரு காதல் கிளி(சௌமி)!!
 

Abirami

Well-known member
KS 38 உயிர்க்கிறேனடா உந்தன் காதலில்❤️

✍️யோசி யோசி✍️
தன் முதல் திருமணத்தால் தன் வாழ்க்கையை தொலைத்து இருகி போனவளின் மனதை தன் காதலால் உயிர்ப்பித்தவனின் காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

பிரகாஷ் :
பல துன்பங்களோடு வாழும் அவள் வாழ்வில் தன் காதலால் வெளிச்சத்தை வரவழைத்தவன். ஸ்ரீ ஸ்ரீ என உருகும் ராமின் காதல் செம்ம. வித்யூத்க்கு தந்தையாகவே மாறிப் போனவன்.

💌ஸ்லோகன்💌

ராமின் காதலால் உயிர்த்தெழும் ஸ்ரீயின் காதலைப் போல,
இந்துவின் காதலால் உயிர்த்தெழுந்தது ராமின் காதல்!!
 

Abirami

Well-known member
KS 94 காதலாய்த் தூறுதே வான் மேகம்❤️

✍️யோசி யோசி✍️
காதல் தூரலில் நினைய ஆசைக் கொண்ட காதல் உள்ளங்களின் காதலைக் கண்டு காதலாய் தூறும் அந்த வான் மேகம், அதில் நினையும் காதலர்களின் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அபிலயா :
மகிழ்ச்சி நிறைக்கும் இடைத்தை கோபம் கொண்டு ஆண்டதால் பத்திக்கப் பட்ட தன் தாய்க்கு நீதி கேட்டவள். எல்லாவற்றையும் இழுந்து துன்பம் கொண்ட நேரமும் தன் காதலை எண்ணி வாழ்ந்தவள்.

💌ஸ்லோகன்💌

அழகிய லையங்களை(அபிலயா) தன் குழலோசை கொண்டு மீட்டும்
அழகிய கிருஷ்ணன்(வம்சி) அவனின் காதல் பாவையவள்!!
 
Top