கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புவனாவின் கவிதைத் தூறல்கள்...

Puvana Chandrasekaran

Moderator
Staff member
கடந்த கால எச்சங்கள்!

இறுதி முடிவைத் தேடி
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நொடியும்
நத்தையாய் நகர்கிறது!
கண்ணாடி பிம்பங்களின்
கலைந்த கோலங்களாய்க்
கடந்த கால எச்சங்கள்
மன நிலத்தில் படர்ந்து
முட்களாய் உறுத்துகின்றன!
காய்ந்த எச்சங்களைச்
சுரண்டிக் குதறும் மனதிற்கு
வலிகளை மறக்கும்
வழிகள் தெரிவதில்லை!
எதிரிகள் எய்த அம்புகள்
உடலில் தைத்தாலும்
காயங்களும் தழும்புகளும்
காலத்தின் கருணையால்
மறக்கடிக்கப் படுகின்றன!
நண்பர் என்று நம்புவோர்
நயவஞ்சகம் புரிகையில்
மரண அடியாக வலிக்கிறது!
காலதேவனின் அழைப்பு வந்து
கதவைத் தட்டும் வரை
நெஞ்சம் மறப்பதில்லை
கடந்த கால எச்சங்களை!

புவனா,

25/09/2020
 

Nagaveni A

New member
மனதின் அவதாரங்கள்

மனம் ஒரு குழந்தை!
அடம் பிடித்து அழுது
காரியம் சாதிக்கையில்!

மனம் ஒரு தாய்!
ஆறுதல் அளித்து
அன்பு செலுத்துகையில்!

மனம் ஒரு நண்பன்!
தோல்வியில் துவளவிடாமல்
துணையாக நிற்கையில்!

மனம் ஓர் ஆசான்!
தவறுகளைக் காட்டித்
தடம் புரளாமல் தடுக்கையில்!

மனம் ஒரு காதலி!
காதலுடன் அணைத்துக்
கனிவும் அன்பும் காட்டுகையில்!

மனம் ஒரு கவிதை!
இயற்கை அழகை ரசிக்கையில்
கற்பனை வானில் உலவுகையில்!


புவனா

15/09/2020
மனம் ஒரு பகைவன்
மறக்கும் நினைவுகளை
நினைவினில் கசையச்
செய்கையில்.
 
Top