கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-19 மொட்டவிழாயோ காதல் மலரே (முடிவுற்றது )

காதல் துணைகள் தீபன் தன்யஸ்ரீ

தன் அண்ணனுக்கு பார்த்தபெண் தானோ என்று நினைத்து திருமணம் புரிகிறான் தீபன், தன் அக்காவிற்கு பார்த்த பையன் என்று நினைத்து திருமணம் புரிகிறாள் தனு. ஒரு இக்கட்டான நேரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

தன்யஸ்ரீ தன்னவள் என எண்ணும்போதே தீபனுக்கு காதல் மொட்டு அரும்புகிறது. ஏற்கனவே தீபனின் அன்பாலும் அக்கறையாலும் கவரப்பட்ட தனு, அவன் தன் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை இல்லை என்று தெரியும் போது காதல் அரும்புகிறது.

திருமணத்திற்கு பிறகு அரும்பும் காதல் மொட்டினை இருவரும் புரிதலின்மையால் உணர்ந்தும் உணராமல் தவிப்பில் இருப்பதால் கதைக்கு 😍😍""மொட்டவிழாயோ காதல் மலரே ""😍😍 என்று தலைப்பு வைத்திருக்கலாம் எழுத்தாளர்.
 

Ammu

Well-known member
காதல் கண்ணனின் ராதை அவள்


யோசி யோசி:


அக்கா மகள் ராதையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காத்திருக்கும் கண்ணன்.


எதிர்பாராத விதமாக ராதையை கல்யாணம் பண்ணி கொண்டாலும் கண்ணனின் ராதை யாக மாறிப் போகிறார்.


அதனால் இந்த தலைப்பு வந்திருக்கலாம்.
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks11 களத்திர காதல்
( களத்திரம் என்றால் திருமண பந்தம், அன்னியோன்யம் என்று பொருள் என நினைக்கிறேன்)

காதலர்கள் பிரதம் அவ்னி

கதை ஆரம்பம் முதல் இருவரின் திருமணம் நடைபெறுகிறது. காதலித்து கரம் பிடிக்க காத்திருந்த நிலையில் காதலி திடீரென்று நிச்சயத்திற்கு பிறகு திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறாள். அவளது மறுப்பையும் மீறி திருமணம் புரிகிறான் காதலன். நாயகன் திருமணத்திற்குப் பிறகு அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை சரி செய்வான் என்று நினைக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு இவர்கள் வாழ்வில் நடக்கும் போராட்டங்கள் பற்றிய கதை என நினைக்கிறேன் எனவே கதைக்கு💞💞 களத்திர காதல்💞💞 என தலைப்பு வைத்திருக்கலாம்.
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks≈42 காதல் கொண்டேனடி கண்மணியே

காதலர்கள் சிவசங்கர் பவானி

நாயகனின் அத்தை மகள் பவானி. சிவசங்கரின் மீது அளவிலா காதல் கொண்டவள் பவானி.. தந்தைக்கும் தாய்மாமன் குடும்பத்திற்கும் இடையில் விரிசல் உள்ள நிலையில் சிவா வை திருமண புரிகிறாள் பவானி.

உற்றவனின் காதலும் இல்லாமல் தந்தையின் அன்பும் இல்லாமல் அல்லாடுகிறார்கள் நாயகி. விதி செய்த சதியால் பிரிந்து உள்ள குடும்பத்தை தன் மதிக்கொண்டு வென்று நாயகனின் அன்புக்கு பாத்திரமாகிறாள் நாயகி.

பிறகு நாயகனின் முழு காதலுக்கு சொந்தமாகி போனால் பவானி. தன் தூய காதலால் காதலனின் நெஞ்சத்தை வென்ற பவானியின் கதை எனவே கதைக்கு 💞😍காதல் கொண்டேனடி கண்மணியே 💞😍 என நாயகன் கூறுவதுபோல் தலைப்பு வைத்துள்ளனர்
 

Sspriya

Well-known member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks≈51 காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

காதலர்கள் மீரா நிரஞ்சன், ஜேம்ஸ் சாம்பவி என்கிற சங்கமித்ரா

சங்கமித்ரா ஜேம்ஸின் புதல்வி மீரா. வெளிநாட்டவர் ஜேம்ஸ்ஸின் மீது காதல் கொண்ட சங்கமித்ரா குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் புரிந்து மீராவை சுமக்கிறாள். விதியின் சூழ்ச்சியால் ஜேம்ஸ் மற்றும் மீராவை பிரிய நேரிடுகிறது. ஜேம்ஸ் எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடிய வில்லை. பல ஆண்டுகள் தன் காதலனையும் குழந்தையும் எண்ணி வாழ்கிறாள்.

காதல் கொண்ட நெஞ்சத்தால் சாம்பவியின் வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை பற்றிய கதை ஆகவே இக்கதைக்கு 😍💞காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி 💞💞என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

தாயும் தந்தையும் இன்றி காப்பகத்தில் வளர்ந்த மீரா, சங்கமித்திரைக்கு உதவி புரிவதற்காக நிரஞ்சன் மூலமாக அவர் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். நிரஞ்சன் இன் குணத்தாலும் பண்பாலும் ஈர்க்கப்படுகிறான் மீரா. இருவரும் காதல் வயப்படுகிறார்கள். புரிதல் இன்மையால் நிரஞ்சன் மீது கோபப்பட்டு பிரிந்து செல்கிறாள் மீரா.

இருவருமே தன் முதல் சொந்தம் என தன் இணையையே எண்ணினார்கள். இவர்களின் காதல் பற்றிய கதை என்பதால்💞💞 காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி💕💕 என்று தலைப்பு வைத்திருக்கலாம்
 
Top