கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks-3 கைத்தலம் பற்றிடும் காதலே

சுஜா வஜ்ராவின் காதல் கதை

ஜென்மஜென்மங்களாய் தொடரும் காதல் பந்தம் இது. நட்சத்திர பெண் சுப்ரஜா தேவி வசிட்டதேவர் வாழ்வை பற்றிய கற்பனை கதை.

காதலால் கைத்தலம் பற்றி கந்தர்வமணம் புரியும் இவர்கள், பிரபஞ்ச காவலனை ஈன்றெடுக்கும் பாக்கியம் பெறுகின்றனர். இவன் பிறந்துவிட்டால் அரக்கர்கள் ஆட்டம் அடங்கும். ஆதலால்அதி பயங்கரமா போர் மூண்டது.

கருவினை காக்க தாயையும் சேயையும் பிரித்து பூலோகம் அனுப்பப்பட்டு 8 மாத பிரபஞ்ச கரு ஒரு கோயில் கருவறையில் காக்க படுகிறது. தன் மகவினை காக்க தாயும் தந்தையும் சாவி ஆகி போனார்கள்.

18 பிறவிகள் எடுத்து தன் கணவனின் சாம்பல் கொண்டு செய்த 18 சிலைகளை சாவியாக பயன்படுத்தி, தன் கருவினை எடுத்து மீண்டும் சுமந்து தன் காதல் கணவனின் கைத்தலம் பற்றுகிறாள் சுஜா.

உலக நன்மைக்காக பல ஜென்மங்கள் பிரிந்து வாழ்ந்த காதலர்கள் மீண்டும் தங்கள் கைத்தலம் பற்றும் காதல் கதை எனவே இக்கதைக்கு "😍😍கைத்தலம் பற்றிடும் காதலே 😍😍" என்று தலைப்பை எழுத்தாளர் தேர்வு செய்துள்ளார்.

குறிப்பு ::: ஷார்ட் ஹா எழுத நெனச்சேன் முடியல 😔.மிகவும் வித்யாசமான ஹிஸ்ட்ரோரிகள் பாண்டஸி ஸ்டோரி. நிறைய புது புது informational concept இருக்கும் கதைல . வித்யாசமான இன்டெரெஸ்டிங்கான கதைனா பிடிக்குமா இந்த கதை படிக்கலாம். 100%. 👌👌👌👍🙏🙏🙏
 

vAaRs1

Member
🤔🤔யோசி யோசி 🤔🤔

Ks##9 மறுத்து பேசாத காதலே (2ud)

நாயகன் துர்மரணத்திற்கு நியாயம் கேக்கும் நாயகி. சென்னை தமிழில் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பு. கண்ணீரில் கரையாமல் படிப்பது கடினம். உருக்கமான காதல் கதை..

நாயகன் அன்பா மீது அன்பு கொண்ட ஒட்டுமொத்த ஊரே திரண்டு இருக்கு மருத்துவ மனையில் நியாயத்திர்காக வேண்டி . காதல் மனைவியிடம் அவன் உரைத்த கடைசி வரிகளை எண்ணி எண்ணி மனம் மறுத்து வெறித்து விழிகிறாள் நாயகி .

கணவனின் மரணத்தின் மர்மம் புரியாமல் தவிக்கும் மனைவியின் தவிப்பை பற்றிய கதை. அவளவன் கிடைசி வரிகளை மறுத்து பேசாமல் போய்விட்டேனே என எண்ணி மறுகும் பேதை பெண்ணின் வாழ்க்கை போராட்டம் எனவே இக்கதைக்கு 💞💞மறுத்து பேசாத காதலே 💞💞 என தலைப்பு வைத்து இருக்கலாம்.

சிறந்த கதை பதிவு போடாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏.one of the best writing.👌👌👌👌தரமான கதை.
same feeling. continue panirukalam inda story :(
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks≈≈31 காதல் வானிலே

காதலர்கள் நிலா இளங்கோ

நாயகி நிலா தாயை இழந்த பின்பு வாழ்வில் அதிகமா கஷ்ட படுகிறாள். அதே விபத்தில் தன் கால்களை இழந்த தந்தை அவளை ஆசைப்படி படிக்க வைக்கிறார். சிறு வயது முதலே நிலாவின் மேல் ஈடுபாடு உண்டு இளங்கோவிற்கு.

தன் பெற்றோரை இழந்த நிலையில் அக்காவின் பொறுப்பில் வளர்க்கிறான். நிலாவின் தந்தை கடைசி ஆசையாக கேட்ட இளங்கோ நிலா திருமணம் சில குழப்பங்கள் இடையில் நடை பெறுகிறது.

தன் உடல்நலபிரச்சனையால் இளங்கோவை விட்டு பிரிகிறாள் நிலா. குழந்தையை ஈன்றெடுத்த பின்னும் சிலப்பல காரணங்களால் நாயகனை தேடி செல்லவில்லை.

இருவரும் தங்கள் இணையை பிரிந்து இருந்த நிலையிலும் இருவருமே தன் இணையை எண்ணி காதல் வானிலேயே வாழ்கின்றனர் எனவே இக்கதைக்கு 💞💞காதல் வானிலே 💞💞என தலைப்பு வைத்து இருக்கலாம்.
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks≈≈111 முதல்முறை காதல் அழைத்ததோ

காதலர்கள் தமிழ் பாரதி

(அன்பு 🤔🤔ஹீரோ வா இல்ல வில்லனானு கதை முழுக்க யோசிப்போம் 😂😂.கடைசில தமிழுக்கும் பாரதிக்கும் உள்ள கெமிஸ்ட்ரி விட தமிழ் அன்பு கெமிஸ்ட்ரி செமயா இருக்கும் 😄💞.)

அன்பு ஒருதலையாக பாரதியை காதலித்து கல்யாணம் வரை வருவான், நடவுளா தமிழ் பாரதியை கடத்தி தன் காதலை காப்பாற்றி கொள்வான்.

காதல் என்ற உணர்வு பாரதிக்கு முதல்முதலாய் தமிழ் இடமே உணர்ந்து இருப்பாள். அதனால தான் தமிழ் முதல்முறையாய் அழைத்ததும் அவனுடன் சென்று இருப்பாள். இல்லனா நாயகியை அவ்ளோ சீக்கிரமா கடத்தி இருக்க முடியாது,எனவே கதைக்கு 💞💞முதல் முறை காதல் அழைத்ததோ 💞💞என தலைப்பு வைத்து இருக்கலாம்.
 

Sspriya

Well-known member
🤔யோசி யோசி 🤔

Ks≈≈18 காதலுற்றேன் என் கவி(தை)யே

காதலர்கள் கவி அன்பன் கவிஸ்ரீ கதைக்காதலி 💞

நாயகி ஒரு எழுத்தாளர் அவங்களால பேசமுடியாது. கல்லூரி பயிலும் மாணவி, பார்ட் டைம் job காக அன்பு ஓட லவ் கஃபே ல வேலை செய்றங்க. நாயகியோட எழுத்தால் ஈற்கப்பட்ட நாயகன் அவங்கள பார்க்காமலே காதலிக்குறார்.

நாயகி அன்போட குணத்தால் வெகுவாக ஈற்கப்படுகிறாள். யாரும் இல்லாத நாயகிக்கு அவன் தூய காதல் ரொம்ப பிடிச்சிப்போது. ரெண்டுபேரோட பெயரில் கவி இருக்கும் எனவே இக்கதைக்கு 💞💞காதலுற்றேன் என் கவிதையே 💞💞என தலைப்பு வைத்து இருக்கலாம்.

கான்செப்ட் நல்லா இருக்கு கதையை நிறுத்தியது வருத்தம் அளிக்கிறது. தொடருங்கள் எழுத்தாளரே 🙏🙏🙏
 
Top