கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் நாவல் போட்டி 2021 - பேசலாம் வாங்க

Abirami

Well-known member
KS 17 மலர்ந்தும் மலராத காதலே!❤️

✍️யோசி யோசி✍️
காதல் மலர்ந்தும் அதை மலரவிடாமல் இழுத்துப் பிடித்து வைத்து காதலை சொல்லாமலே காதலை அடைய நினைப்பதே மலர்ந்தும் மலராத காதல்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

அஞ்சலி :
குடும்பத்தை நேசித்து அதை ஒன்றிணைக்க போராடியவள். சந்தோஷின் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்தாமல் அவனின் சந்தோஷத்தை விரும்பியவள். நட்புக்கு சிறந்த இலக்கணமாக திகழ்ந்தவள்.

💌ஸ்லோகன்💌

சந்தோஷின் துணையாக இருந்து அனைவரின்
சந்தோசத்தையும் மீட்டெடுத்தவளே கண்ணனின் அஞ்சலி!!
 

Abirami

Well-known member
KS 51 காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி❤️

✍️யோசி யோசி✍️
காதல் வந்துவிட்டால் அதோடு சேர்ந்து காதல் கைகூடுமா இல்லையா என சிறு கவலையும் வந்துவிடும். காதலால் கசிந்து உருகிய நான்கு உள்ளங்களும் தத்தம் காதலின் பிரிவில் வாடி கண்ணீர் உகுக்கின்றனர். அவர்களின் காதல் கைக்கூடுமா??

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மீரா :
எதிர்ப்பார்ப்பு இல்லாது எல்லோர் மீதும் அன்பை பொழிபவள். மீராவின் சுயநலமில்லா காதலும் அதில் அவள் நிரஞ்சன் வைத்த அன்பும் சூப்பர். தன் தோழனின் இழந்த தன் சொந்தங்களை மீண்டும் அடைந்து மகிழ்ச்சி அடைகிறாள்.

💌ஸ்லோகன்💌

நிரஞ்சன் மீராவின் காதலை சேர்த்து வைத்து
ஜேம்ஸ் சங்கமித்ராவின் காதலையும் சேர்ப்பதே
மாய கண்ணனின் விளையாட்டாம்!!
 

Abirami

Well-known member
KS 35 காதல் மந்திரம் சொல்வாயோ❤️

✍️யோசி யோசி✍️
எவ்வளவு உயர்ந்த காதலாக இருந்தாலும் காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பின்னும் காதலை சொல்லும் காதல் மந்திரத்தை எதிர்ப்பார்க்கும் காதலன், காதலியின் மனம்.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

முகில் :
ரொம்ப அமைதியான சைலண்ட் கேரக்டர் தான் விரும்பி கேட்டும் அவன் கண்ணியமான பேச்சு, யாரையும் புன் படுத்தாத மனம். காதலி மறுத்த பின் அவளை விட்டு விலகி நிற்கும் பாங்கு, நட்பு, தங்கையின் மேல் கொண்ட பாசம். தோற்றத்தையும் அடையாளத்தையும் வைத்து போராடும் அவன் மனது எல்லாமே சூப்பர்.

💌ஸ்லோகன்💌

வெண்பாவின் மனதை ஆள நினைக்கும்
வர்மாவுக்கும்
சாருவின் காதல் கிடைக்க காத்திருக்கும் முகிலுக்கும்
கிட்டியதா அந்த காதல் மந்திரம்??
 

Abirami

Well-known member
KS 139 காதல் சில குறிப்புகள்❤️

✍️யோசி யோசி✍️
வலி மிகுந்த காதலில் அந்த வலியை கடந்து வாழும் காதல் வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய குறிப்புகள் பல கொண்ட காதல் கதை.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மோகன் :
நட்பு அண்ட் காதல் இரண்டிலும் சிறந்தவர், பிரிந்ததாக எண்ணிய நட்பின் பிரிவு வருத்தத்தை கடந்து நட்புடன் கைக் கோர்த்தவர். புத்தகங்களை அதிகமாக நேசித்து மகனுக்கு காதலில் வழிக்காட்டிவர்.

💌ஸ்லோகன்💌

ஜாஹிர் பிரேமா காதலை சேர்த்து வைத்த
மோகன் விஜியின் காதலை, காதல் குறிப்புகளின்
சேர்க்குமா பாபு பானுவின் காதல்!!
 

Abirami

Well-known member
KS 133 மீண்டும் ஒரு காதல்❤️

✍️யோசி யோசி✍️
காதல் தோல்விக்கு பிறகும் மலரும் காதல் உணர்வுப்பூர்வமாக அதீத தாக்கம் கொண்டவை, அதே போல் மலரும் காதல் இரண்டாக மலரும் முதல் காதலாய் இங்கு இடம்பெறுகிறது.

👤பிடித்த கதாப்பாத்திரம்👤

மினு :
பிரிந்த காதலர்களை சேர்க்கும் தூண் இவள், சிறு மலரென விரியும் மொட்டுக்கு தந்தை மேல் கொள்ளை பாசம். காதலால் உயிர் மரிக்கும் வலியை சுமந்தவர்களை உயிர்ப்பிக்கும் காற்று அவள். குட்டி மின்மினி தேவதை.

💌ஸ்லோகன்💌

தேவா வேதாவாய் காதலில் தோற்று தேவ் நிவியாய் உயிர் பெறுகிறார்கள் மீண்டும் மலர்ந்த காதலில்!!
 
Top